பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

327

13. கயமை

1073. நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்’

நெஞ்சத் தவல மிலர்.

( இ-ள்) நன்மை யறிவாரினு ம் கயவர் திருவுடையர்; இம் மை மறுமைக்கு உறுதியான செய்யப் பெறுகின்றிலோ மென் னும் கவற்சி நெஞ்சின்கண் உறுதலில ராதலான், .(எ- று) .

இது, அறமறியாரென்பது. 3

107.4. அச்சமே கீழ் கள தாசார மெச்ச

மவாவுண்டே லுண்டாஞ் சிறிது.

(இ-ள்) கயவர் ஆசாரமுடைய ராதற்குக் காரணம் அச்சமே; அஃதொழிய, ஒருபொருள் மேல் ஆசையுடையராயின், அது காரண மாகவும் சிறிது ஒழுக்கம் உண்டாம், (எ-று).

இஃது, இயல்பான ஒழுக்கம் இலரென்றது. 4 10.75. அகப்பட்டி யாவாசைக் காணி னவரின்

மிகப் பட்டுச் செம்மாக்குங் கீழ் . (இ-ள்) மனையகத்திருந்து பறட்டையாம் பெண்டிரைக் காணின், அவரினும் மிகப் பறட்டையாயின் அதனைப் பெற்றே மென்று இறுமாப்பர் கயவர், (எ-று).

இது, நிறையிலரென்றது. 5

1076. உடுப்பதரஉ முண்பதரஉங் காணிற் பிறர்மேல்

வடுக்காண வற்றாகுங் கீழ்.

( இ-ள்) பிறர் உடுப்பதனையும் உண்பதனையும் காண்பாரா யின், அவர் மாட்டு உள்ள குற்றங்களை ஆராயவல்லராவர் கயவர்

(எ-று).

இஃது, அழுக்காறுடையாரென்றது. 5

1. திருவுடையார் ‘ என்பது மணக். பாடம். 2. ஆடன் கைய ‘ என்பது மணக். பாடம்.