பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

373

6. நினைந்தவர்.புலம்பல்

(இ- ள்) தம்மாற் காதலிக்கப்பட்டவரை நினைத்தாலும் நீங் காத பெருங்களிப்பைத் தரும் ஆதலால், கள்ளினும் காமம் இனிது, ( )!).

“நினைவு மகிழ்ச்சியைத்தாரா நின்றமையால் எ ன் ம ன ம் காதலசை ஒழிவின்றி நினையா நின்றது ‘ என்று தோழிக்குக் கூறியது. 1

1202. யாழ் முளேங்கொ லவர்ெ நஞ்சத் தெந்நெஞ்சத்

தோஒ வுளரே யவர்.

(இ-ள் அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல்லோ; எம் முடைய நெஞ்சின்கண் எப்பொழுதும் தாம் உளராகாநின்றார், (எ- று) .

ஒஒ என்பது மிகுதிப்பொருளின்கண். வந்ததாதலான், எப் பொழுதும் என்னும் பொருளதாயிற்று. அவரும் முன்பு நம்மோடு ஒத்த அன்பினராதலானே எம்மைப் போல அவரும் நினைப்பரோ” என்று தோழி யொடு சொல்லியது. 2

1203. நினைப்பவர் போன்று நினையார்கொ றும்மல்

சினைப்பது போன்று கெடும்.

(இ-ள்) அவர் நம்மை நினைப்பார் போன்று நினையார் கொல்லோ; தோன்றுவதுபோன்று கெடா நின்றது தும்மல், (எ-று).

தலைமகள் உலகத்துப் பெண்டிராயுள்ளார் கூறுவதொன்றை ஈண்டுக் கூறினாள். தும்மல் இவ்வாறு செய்தலான் நினைப் பாரைப் போன்று நினையாராக வேண்டும்” என்று தோழிக்குக் கூறியது. 3.

1204. தந்தெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் காணார்கொ

லெந்நெஞ்சத் தோவா வரல்.

(இ-ள்) தமது நெஞ்சின்கண் (எம்மை) யாம் சொல்லாமல்

காவல்கொண்டவர் என்று நெஞ்சின்கண் ஒழியாதே வருதலைக் காணாரோ, (எ-று).