பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

19. ஈகை

இது கொள்வோ ரமைதி யறிந்து கொடுக்கவேண்டுமெனினும் வ யாவீகையா தலால், யாதொருவாற்றானு ங் கொடை நன்றேன்பது கூறிற்று. 1.

222. வறியார்க்கொன் றிவதே பீகைமற் றெல்லரங்

குறியெதிர்ப்பை நீர துடைத்து.

(இ-ள்) ஈகையாவது இல்லாதார்க்கு யாதானும் ஒன்றைக் கொடுத்தல்; இஃதொழிந்த கொடையெல்லாம் குறியெதிர்ப்பை கொடுத்த நீர்மையாதலையுடைத்து, (எ-று).

இது, கொடுக்குங்கால் இல்லா தார்க்குக் கொடுக்கவேண்டு மென்றது. 2

223. இலனென்னு மென் முரை யாமை யிதல்

குலனுடை பான் கண்ணே யுள.

(இ-ள்) இரந்துவந்தார்க்கு இல்லை யென்னாநின்ற துன்பத் தைக் கூறாது ஒழிதலும் கொடுத்தலும் குடிப்பிறந்தார் மாட்டேயுளவாம், (எ-று)

இது, கொடுக்குங்கால் மறாது கொடுக்க வேண்டுமென்றது.

இலனென்னும் எவ்வம் உரையாமையிதல் என்றதனை இல்லை யென்று சொல்வதன் முன்னே குறிப்பறிந்து கொடுத்தல் எனினும் அமையும். 5

224. சாதலி னின்னாத தில்லை யினிததுஉ

மீத லியையயாக் கடை.

(இ-ள்) சாதலின் மிக்க துன்பமில்லை; அதுவும் இனிதாம், இரந்து வந்தார்க்குக் கொடுக்க முடியாதவிடத்து, (எ-று).

இஃது. ஈயாது வாழ்தலிற் சாதல் நன்றென்றது. 5

225. இன்னா திரக்கப் படுத லிரந்தவ

னின்முகங் காணு மளவு