பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

சீட்டினைக் காட்டித் திருமணத்தைத் தடுத்தார். வெண் ணெய்நல்லூர்ச் சபையில் ஆவண ஒலே ஒன்றைக் காட்டி வழக்கில் வென்ற்ருளிஞர். கிழவேதியர் திருவெண்ணெய் நல்லூர் அருட்டுறைக் கோயிலுள் புகுந்து மறைந்த நிலையில் அவருடன் சென்ற நம்பியாரூரர் அவரைக் காணுது திகைத்து நின்ருர், அந்நிலையில் 'நமக்கு அர்ச்சனை பாட்டேயாகும். ஆதலால் நம்மைச் சொற்றமிழ் பாடுக என இறைவன் பணித்தருளியவண்ணம் பித்தா பிறை சூடி என்னும் திருப்பதிகத்தினைப் பாடிப் போற்றினர். திருத்துறையூர் இறைவனேயிறைஞ்சித் தவநெறிவேண்டி ஞர். திருவதிகையில் இறைவன் திருவடி சூட்டப் பெற்ருர் . தில்லைப்பதியை யடைந்து இறைவனது திருக் கூத்தினை ஐம்புலன்களும் ஒன்றிய நிலையிற் கண்டு மகிழ்ந்து திருப்பதிகம் பாடிப் பரவிஞர். அந்நிலையில் 'ஆரூரில் நம்பால் வருக என அருள்வாக்கு எழுந்தது. அடியார்கள் எதிர்கொள்ளத் திருவாரூரை அடைந்து இறைவனைப் போற்றினர். தோழமையாக உமக்கு நம்மைத் தந்தனம்’ என ஆரூரண்ணல் அருள்செயத் தம்பிரான் தோழரானர். முன்பு கயிலையிற்கண்ட கமலினியார் திருவாரூரில் பதியிலார்குலத்துப் பாவை யார் என்னும் பெயருடன் தோன்றி ஆடல் பாடல் அழகு என்பவற்ருற் சிறந்து விளங்கினர். பண்டை நல்லூழிற்ை உரவையாரைக் கண்ட நம்பியாரூரர் இறைவன் அருளால் அவரைத் திருமணம் புரிந்துகொண்டார்.

பரவையார் கணவராகிய சுந்தரர் திருவாரூர்க் கோயிலிற் புற்றிடங்கொண்ட பெருமானை வழிபடச் செல்லும்போது தேவாசிரிய மண்டபத்திற் கூடியிருந்த அடியார் திருக்கூட்டத்தினைக் கண்டு இவர்கட்கு அடியவகுைம்பேறு கிடைத்தல் வேண்டும் என்று எண்ணிக் கொண்டு கோயிலினுள்ளே சென்ருர், அப்போது புற்றிடங்கொண்ட பெருமான் எதிரே வந்து காட்சி கெர்டுத்தருளி அடியார் பெரும்ையினையுணர்த்தி, தில்ல்ை