பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

தெழுத்தோதி ஏறினர். அக்குதிரை விண்ணிற் போந்து சுந்தரர் அமர்ந்து செல்லும் வெள்ளானேயை வலம் வந்து அதன்முன் சென்றது. களையாவுடலோடு கயிலையை அடைந்த சுந்தரர் பண்டுபோல் இறைவனுக்கு அணுக்கத் தொண்டு புரியும் ஆலாலசுந்தரராயினர். சேரமான் சிவகணத் தலைவராளுர், நம்பியாரூரரை மணந்து வாழ்ந்த பரவையாரும் சங்கிலியாரும் திருக்கயிலையை அடைந்து உமையம்மையார்க்கு அணுக்கராகக் கமலினி யும் அநிந்திதையும் ஆகித் தொண்டு புரிந்து மகிழும் பேறு பெற்றனர்.

சுந்தரர் தாம் பாடியருளிய திருத்தொண்டத் தொகையில் திருநீலகண்டக்குயவர் முதல் திருநீல கண்டப்பாணர் ஈருக அறுபது பேர் தனியடியார்களைக் குறித்து அடியேன் எனப் போற்றியுள்ளார். அவர்களுடன் திருத்தொண்டத்தொகை அருளிய சுந்தரர். அவர் தந்தையார் சடையனுர், தாயார் இசைஞானியார் ஆகிய மூவரையும் சேர்த்தெண்ணத் தனியடியார்கள் அறுபத்து மூவர் ஆவர். தில்லேவாழந்தணர், பொய்யடிமை யில்லாத புலவர் , பத்தராய்ப் பணிவார் , பரமனேயே பாடுவார். சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார், திரு வாரூர்ப் பிறந்தார்கள், முப்போதுந் திருமேனி தீண்டு வார் முழுநீறு பூசிய முனிவர், அப்பாலும் அடிச் சார்ந்தார் ஆகிய ஒன்பது திருக்கூட்டத்தாரும் தொகை யடியார் எனப் போற்றப்பெறுவர். இவர்கள் சுந்தரர் காலத்திலும் அவர் காலத்திற்கு முன்னும் பின்னும் ஆக மூன்று காலத்திலும் உள்ளவர்கள் ஆவர்.

திருத்தொகையிற் குறிப்பிடப்பெருதவரும் சைவ சமயகுரவர் நால்வருள் ஒருவரும் ஆகிய மாணிக்கவாசகர் வரலாறு இதனுடன் இணைக்கப்பெற்றுள்ளது.

(2) தில்லவாழந்தணர்

அருமறைகளே நன்குணர்ந்து தில்லைப்பதியில் வாழும் அந்தணர்களாகிய இவர்கள் தில்லேச்சிற்றம்