பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32.

செல்லும்போது இறைவரே உடன்வந்து பொதிசோறளிக் கப்பெற்ருர் தொண்டைநாட்டுத் தலங்களை வணங்கித் திருக்காளத்தி மலையை வணங்கியபோது திருக்கயி லாயத்தைக் கண்டு வழிபடவேண்டும் என்னும் எண்ணம் உள்ளத்தில் தோன்றவே வடநாட்டு யாத்திரையை மேற் கொண்டார். நாவுக்கரசர் வடநாட்டில் வாரணுசி முதலிய தலங்களை வழிபட்டுக் கயிலைமலையை நோக்கிக் காடுமலை முதலியவற்றைக் கடந்து செல்லும் வழியில் உடல் தளர்ச்சியுற்ருராக அந்நிலையில் சிவபெருமான் தவ மு னி வரா கத் தோன்றி அவரைத் தடுத்து நிறுத்தி விண்ணிடை மறைந்து நின்று, அருகிலுள்ள தடா கத்தில் மூழ்கித் திருவையாற்றிற் கயிலைக்கோலம் காண்டாயாக’ என அருள் புரிந்தார். அவ்வாறே அக் குளத்தில் மூழ்கித் திருவையாற்றில் எழுந்து திருக் கயிலாயக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தார். திருப் பூந்துருத்தியில் திருமடம் அமைத்தார். பாண்டி நாட்டிற் சமணரை வாதில் வென்று திருநீற்றின் ஒளி பரப்பிய திருஞானசம்பந்தர் திருப்பூந்துருத்தியில் திருநாவுக்கர

சரைக் கண்டு மங்கையர்கரசியார் , நின்றசீர் நெடு மாறர், அமைச்சர் குலச்சிறையார் ஆகியோரது அன்பின் திறத்தை எடுத்துரைத்தார். நாவுக்கரசர் பாண்டி

நாட்டுத் தலங்களை வழிபட எண்ணித் திருப்புத்துரை இறைஞ்சி மது ைரத் திருவாயிற் பெருமானை வழி பட்டுத் திருப்பதிகம் பாடினர். திருப்பூவணம் திருவிரா மேச்சுரம் நெல்வேலி, கானப்பேர் முதலிய தலங்களை வழிபட்டுத் திருப்புகலூரடைந்தார். புகலூர்ப்பெரு மானைப் போற்றி உழவாரப்பணி புரிந்தார். தம்மைப் புகலூர் இறைவன் திருவடிக்கீழ் விரைவிற்சேர்த்துக் கொள்வான் என்னும் முன்னுணர்வு மூளப்பெற்று சித்திரை மாதம் சதயத்திருநாளில் எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனே' என்னும் திருத்தாண்டகத் திருப்பதிகத்தைப் பாடிப் புண்ணியா உன்னடிக்கீழ்ப்