பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

அருள்வாக்கினைச் செவிமடுத்த சேரமான் பெருமாள் நாயனர் தில்லையம்பலத்தில் அருட்கூத்தினை வணங்கி வன்ருெண்டரையும் கண்டு வழிபட விரும்பினர். சேர நாட்டிலிருந்து புறப்பட்டுக் கொங்குநாடு கடந்து சோழ நாட்டை யடைந்தார். காவிரியில் நீராடினர். தில்லை மூதுாரில் அடைந்து திருக்கூத்துத் தரிசனங்கண்டு பொன்வண்ணத்தந்தாதி பாடிப் ேப ா ற் றி ன ர். திருவா ரூரையடைந்து வன்ருெண்டரைக் கண்டு புற்றிடங் கொண்ட பெருமானப் பணிந்து திருமும்மணிக்கோவை பாடினர். நம்பியாரூராருடன் திருமறைக்காடு முதல் தலங்களை வழிபட்டுப் பாண்டி நாடடைந்து மதுரைத் திருவாலவாய்ப்பெருமானப் போற்றினர். பாண்டிவேந் தனும் பாண்டிய மன்னன் மகளை மணந்து மதுரைக்கு வந்திருந்த சோழமன்னனும் தாமுமாக முடிவேந்தர் மூவருடன் சுந்தரர் திருப்பரங்குன்றப் பெருமானைப் பாடிப் போற்றி மகிழும் நிலையில் அன்பினுல் அளவளாவி மகிழ்ந்தார். வன்ருெண்டருடன் சோழ நாடடைந்தார். பர்வையார் இசைவு பெற்று வன்ருெண்டரை மலை நாட்டுக்கு அழைத்துச் சென்று உபசரித்துப் போற்றினர். திருவஞ்சைக்களத்தில் இறைவரை வழிபட்ட சுந்தரர் இறைவன் அனுப்பிய வெள்ளையானைமீதமர்ந்து சிெல்லும் போது தம்அன்புடைத் தோழராகிய சேரமா னைத் தம் நெஞ்சத்தில் நினைத்துச் சென்ருர். திருமஞ்சன சாலையில் இருந்த சேரமான் அதனையுணர்ந்து தமது குதிரையின் செவியிலே திருவைந்தெழுத்தினை உ பதே சித் தார். சேரமான் ஊர்ந்த குதிரை விசும்பிற் சென்று வன் ருெண்டர் ஏறிச் செல்லும் வெள்ளையானையை வலம் வந்து அதற்கு முன்னே சென்றது. சேர வேந்தரைத் தொடர்ந்த வீரர்கள் தம் உடைவாளினல் தம் உடம்பை வெட்டி வீழ்த்தி வீரயாக்கை பெற்று முன் சென்றனர். திருக்கயிலை வாயிலில் சேரமான் பெருமாள் தடைப்பட்டு நின்ற நிலையில் அவர்தம் உயிர்த்தோழர் நம்பியாரூரர் இறைவனே இறைஞ்சிச் சேரர் பெருமான உள்ளே