பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

հC)

ஒரு குடும்பத்தாரிடம் ஒப்படைத்துவிட்டுச் சேரநாட்டை அடைந்தார்கள். கூற்றுவளுர் தில்லையம்பலவரை மனங் கொண்டு அடியேன் நின் திருவடிப் போதினை முடியாகப் பெறுதல்வேண்டும் எனக் கூத்தப்பெருமானே வேண்டித் துயில் கொண்டார். அந் நிலை யி ல் கூத்தப்பெருமான் கூற்றுவ நாயஞர் கனவில் தோன்றித் தம்முடைய திரு. வடியை முடியாகச் சூட்டியருளிஞர். அம்புலதிருவடியை முடியாகத் தாங்கிய கூற்றுவ நாயனர் திருத்தலங்கள் தோறும் சிவபெருமான வழிபட்டு நாட்டின் நீதிமுறையில் ஆட்சி புரிந்து உமையொருபாகர் திருவடியை அடைந்தார்.

(41) பொய்யடிமைவில்லாத புலவர்

மதுரைத் திருவாலவாயில் நிலைபெற்ற தமிழ்ச் சங்கத்தில் அமர்ந்து பொய்ப்பொருட்டு அடிமைப் படாது மெய்ப்பொருளாகிய சிவபெருமான் திருவடிக்கே உள்ளத்தைச் செலுத்தி அகப்பொருட்செய்யுள்களைப் பாடிய க்பிலர் பரணர் நக்கீரர் முதலிய நாற்பத் தொன்பதின்மராகிய புலவர்களும் அவர்களைப் போன்று மெய்ப்பொருளாகிய இறைவனுக்கே புலமைப்பணி புரியும் தமிழ்ப்புலவர்கள் அனைவரும் ஆகிய திருக் கூட்டத்தினர் திருத்தொண்டத்தொகையில் நம்பியாரூர ராற் போற்றப்ப்ெற்ற பொய்யடிமையில்லாத புலவர்கள் ஆவா.

(42) புகழ்ச்சோழ நாயனர்

சோழநாட்டின் தலைநகரமாகிய உறையூரில் சோழர் குடியிலே தோன்றியவர் புகழ்ச்சோழர். இவர் உலக மெலாம் செங்கோலின்வழி நிற்பச் சிவநெறி தழைப்ப அரசு புரிந்தார். கொங்கு நாட்டரசர்களும் குடநாட்டு வேந்தர்களும் தரும் தி ைற ப் .ெ பா. ருளே வாங்குதற் பொருட்டுச் சேனையுடன் கருவூரில் தங்கி ஆனிலை யண்ணலாரை இறைஞ்சி அரியாசனத்தில் வீற்றிருந்தார். ஒருநாள் சிவகாமியாண்டார் கையிலுள்ள பூக்குடலையைப் பட்டத்து யானே சிதறிய குற்றத்திற்காக அந்த யானையை