பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii

அவர்கள் மகன் திருவளர் செல்வன் மாணிக்கத்திற்கும் நிகழ்ந்த திருமண அன்பளிப்பாக இந்நூல் வெளியிடப் பெறுகிறது.

திருப்பெருந்துறையில் திருவாசகப் பாடசாலை நிறுவிக் குலப்பிரிவின்றி எல்லா இனத்தவரும் திரு முறைகளே இசையுடன் பயின்று ஓத வழிகாட்டியவரும் திருநாகேச்சரம், திரு நீடுர் முதலிய தலங்களில் உள்ள திருக்கோயில்களைப் புதுப்பித்துப் பணி செய்த திருப் பணிச் செல்வரும் திருவாசக பூசையினே இடைவிடாது இயற்றிய சிவாநுபூதிச் செல்வரும் ஆகிய என் தந்தை யார் அரிமமும் அரு. அ. அண்ணுமலேச் செட்டியார் அவர் களுக்கு இந்நூல் காணிக்கையாக்கப் பெறுகின்றது. இந்நூலைத் தொகுத்து உதவியவர் என் தந்தையார் நிறுவிய திருப்பெருந்துறை திருவாசக பாட சாலேயிற் பயின்றவரும் அண்ணுமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும் என்கெழுதகை நண்பரும் ஆகிய திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர் கலைமாமணி பேராசிரியர் திரு. க. வெள்ளே வாரணன் அவர்களாவர். எண்ணற்ற பணிகளுக் கிடையே, என் அன்பு வேண்டுகோளுக்கிணங்கி, இவ் வரும்பெரும் நூலே அழகுற ஆக்கித்தந்த அன்னருக்கு என் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

'திருத்தொண்டர் வரலாறுகளே எல்லோரும் சுருக்கமாகவுணர்ந்து கொள்ளும் நோக்குடன் வெளி யிடப்பெறும் இந்நூல்ச் சைவவுலகம் வரவேற்றுப் பயன் பெறும் என நம்புகின்றேன்.

இங்ங்னம் அன்புள்ள

அ. கணபதி