பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ 8

திருவமுதளிக்கும் தவமுடைய அடியார் ஒருவர் உணவுக் குரிய நெல் எங்கும் கிடைக்காமையால் அரசர்க்குரிய நெற்பண்டாரத்திலே நள்ளிரவிற் புகுந்து நெல்லைக் களவு செய்தார். அந்நிலையிற் காவலர்கள் அவ்வடிய வரைப் பிடித்து இடங்கழியார் முன்னர்க் கொண்டு வந்து நிறுத்தினர். அரசர் அவரைப் பார்த்து ஏன் நெல்லைக்களவு செய்தீர் என் வினவிஞர். சிவனடியார் களைத் திருவமுது செய்வித்தற்குப் பொருள் இல்லாமை யால் இவ்வாறு செய்தேன்’ என அவ்வடியவர் கூறினர். அம்மொழி கேட்டு இரங்கிய இடங்கழியார் எனக்கு இவரன்ருே பண்டாரம்' என்று சொல்லிப் பாராட்டினர். 'சிவனடியார்கள் எல்லோரும் எனது நெற்பண்டார மாத்திரமன்றி நிதிப்பண்டாரங்களையும் கவர்ந்து கொள்க’ என எங்கும் பறையறையச் செய்தார். அருள் வேந்தராகிய இவர் தண்ணளியுடையராய் நெடுங் காலம் அரசு புரிந்து சிவபதம் பெற்ருர், (56) செருத்துணை நாயஞர்

சோழநாட்டின் அகநாடுகளில் ஒன்ருகிய மருகல் நாட்டிலேயுள்ள தஞ்சாவூரிலே வேளாளர் குலத்தே தோன்றியவர் செருத்துணை நாயனர் . சிவபெருமான் திரு வடிக்கே பதித்த நெஞ்சுடைய இவர் திருவாரூரை அடைந்து புற்றிடங்கொண்ட பெருமானேக் காலந் தோறும் போற்றித் திருத்தொண்டு புரிந்தார். ஒருநாள் பல்லவர் வேந்தர் கழற்சிங்களுருடைய உரிமைப்பெருந் தேவி திருக்கோயிற் பூமண்டபத்தின்கீழ் வீழ்ந்து கிடந்த நறுமலரை எடுத்து முகர்ந்ததைக் கண்டு வெகுண்டு அவளது மூக்கினே அரிந்தார். இவ்வாறு சிவபெருமான் திறத்தில் குற்றஞ்செய்தோர் யாவராயினும் அச்சமின்றித் தண்டித்துத் திருத்திய இவர் இறைவர் திருவடி நீழல் அடைந்து இறவா இன்பம் எய்தினர். (57) புகழ்த்துணை நாயஞர்

சோழநாட்டில் அழகார்புத்துார் என வழங்கும் அரிசிற்கரைப் புத்துரில் ஆதிசைவர் மரபில் தோன்றியவர்