பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

(72) இசைஞானியார்

சடைநாயனரது திருமனைவியாராகிய இசைஞானி அம்மையார் சைவமுதல்வராகிய ஆளுடைய நம்பியென் னும் சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் பெற்ற பெருமை வாய்ந்தவர். திருவாரூர் இறைவரை மறவாத நெஞ்ச முடையவர். இவர் திருப்பெயரை ஒதுவோர் சிவ ஞானம் பெறுவர்.

இவர் , கமலாபுரத்தில் (திருவாரூரில்) கெளதம

கோத்திரத்தவரான ஞானசிவாசாரியார் என்பவருடைய மகள் என்று திருவாரூர்க் கல்வெட்டிற் குறிக்கப் பெற்றுள்ளார்.

என்றும் இன்பம் பெருகும் இயல்பிளுல் ஒன்று காதலித் துள்ளமும் ஓங்கிட மன்று ளாரடி யாரவர் வான்புகழ் நின்ற தெங்கும் நிலவி யுலகெலாம் .