பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 G

குருவே சிவமெனக் கொண்டு உடல் பொருள் ஆவி யனைத்தையும் ஆசிரியர்க்கு உரிமையாக்கி உள்ளங்கசிந் துருகி அழகிய மாணிக்கமணிபோலும் சொற்களால் இயன்ற திருவர்சகச் ச்ெழும்பாடல்களைப் பாடிப் போற்றினர். அதனைக் கேட்டு மகிழ்ந்த குருமூர்த்தி மாணிக்கவாசகர் எனப் பெயர் சூட்டித் திருக்கோயிற் பணிசெயப் பணித்து அடியார் கூட்டத்துடன் மறைந் தருளிஞர்,

மாணிக்கவாசகர் துறவுக்கோலந் தாங்கித் தாம் கொண்டுவந்த பொருள்களையெல்லாம் அரன்பணிக்கும் அடியார்க்கும் செலவு செய்தார், குதிரை வாங்கச் சென்ற வாதவூரர் செயலையறிந்த பாண்டியன் குதிரை யுடன் விரைவில் வருக என ஒலே போக்கினன். அவ்வோலையைக் கண்டு திகைப்புற்ற வாதவூரர் பெருந் துறைப் பெருமானிடம் சென்று முறையிட்டார். பெருந். துறையிறைவரும் வாதவூரரை நோக்கி 'நாம் ஆவணி

மூலத்தில் குதிரைகளேக் கொண்டுவருவோம். நீ முன்னர்ச் செல்க. இம்மாணிக்கக்கல்லை அரசனிடம் கொடுக்க என்று கூறி ஒரு மாணிக்க்க்கல்லையும் கொடுத்து அனுப்பினர். அத னே ப் பெற்றுக்கொண்டு மதுரையை அடைந்த வாதவூரர் பாண்டியனிடம்

அம்மணியைப் பரிசாகத் தந்து ஆவணிமூலத்தில் குதிரை வரும் என்று கூறினர். பாண்டியனும் மகிழ்ந்திருந் தான். சொல்லியபடி ஆவணிமூலத்தில் குதிரை வாராமை யால் சினமுற்ற பாண்டியன் மாணிக்கவாசகரைச் சிறை யிலடைத்துத் துன்புறுத்தினன். அப்போது மணிவாசகர் இறைவன் திருவருளையெண்ணி நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானே இதற்கு நாயகமே என்ற மனத்திண் மையுடன் துன்பங்களைப் பொறுத்துக்கொண்டிருந்தார். அந்நிலையிற் பெருந்துறையிறைவர் நரிகளையெல்லாம் பரிகளாக்கித் தாமே குதிரைச் சேவகை ஆவணி மூலத் தன்று மதுரைக்கு வந்து குதிரைகளைப் பாண்டியனிடம் ஒப்படைத்து மறைந்தருளினர்.