பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



தேவர்தம் பொன் உலகத்தை, தழையச் செய்தருளிய, வெற்றி பொருந்திய ஒப்பற்ற வேலாயுதத்தை உடையவனே தமிழ் மொழிக்கும் பல்வகைப் பாடல்களுக்கும் எல்லோரும் புகழ்தற்குரிய வயலூருக்கும். வேண்டும் வரங்களைத் தரவல்ல திருக்கற்குடி என்னுந் தலத்திற்கும். பெருமானே குடத்தை உடைத்தும், மதக் களிப்புடைய யானையைத் துரத்தியும், மலைச் சிகரத்தைக் கோபித்தும், சக்ரவாளப் பறவைக் கூட்டத்தை அழித்தும், மருளச் செய்து களிப்புக்கொண்டு, ஆசான் அறிவுரை உண்மையினைக் கடைப்பிடித்த முனிவர்களும் சோர்வடைய, விம்மித் திரண்டு பருத்து பெருகி எழுந்து வெளிக் கிளம்பிய வாரணிந்த தனத்தையுடைய பெண்களின் இன்பப் புணர்ச்சிக் கடலில் திளைத்தில் இன்றி நீங்கி இருக்கும்படி விரும்பி, திருவடி அளித்தருள்வாயாக.

களிறு ஆண் யானை மதக் களிப்பை உடையது என்பது பொருள். குலத்தை கூட்டத்தை குருத்தத்துவத்துத் தவர்சோர என்றதில் உம்மை தொக்கது. மாதர் - அழகு உடையவர்: 'காதலைச் செய்பவர் என்ற பொருளில் வந்த பெண்பாற் பெயர்.

முருகன் தமிழ்க்குப் பெருமாள் என்றது அகத்தியர்க்குத் தமிழ் ஒதியதனாலும், சங்கத்துப் புலவராக இருந்ததான்ாலும் என்பர். இதனை, -

இதனை முருகன் சங்கத்திரும் உன் முக்கன்

அரசன் புகை விலங்கிட்டோன்" என்னும் வேம்பத்தூரர் வாக்காலும் அறிக.

இன்னும் வேடனாக நின்று பொய்யாமொழியாரிடம் தன் பெயரை "முட்டை" என்று கூறிச் சுரம் போக்காகப் பாடக் கூறி அவா பாடிய,