பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

17



விநாயகர் துதி

1. தத்தன தனதன தத்தன தனதன

தத்தன தனதன தனதான். கைத்தலம் நிறைகளி அப்பமொடு அவல்பொரி

கப்பிய கரிமுகன் - அடிபேணிக் கற்றிடும் அடியவர் புத்தியி உறைபவ

கற்பகம் என் வினை கடிதேகும் மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்

மற்பொரு திரள்புய மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை

மட்டவிழ் மலர்கொடு பணிவேனே முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்

முற்பட எழுதிய முதல்வோனே முப்புரம் எரிசெய்த அச்சிவ னுறைரதம்

அச்சது பொடிசெய்த அதிதீரா அத்துயர் அதுகொடு சுப்பிர மணிபடும்

அப்புனம் அதனிடை இபமாகி அக்குற மகளுடன் அச்சிறு முருகனை -

அக்கண மணமருள் - பெருமாளே.

திருக்கையிலே நிறைந்துள்ள பழங்களையும் அவலையும். பொரியையும், அப்பத்துடன் உண்கிற, யானை முகத்தையுடைய விநாயகப் பெருமானின் திருவடிகளைத் துதித்து, தனது உண்மையைத் தேர்ந்து தெளிய அறிந்து கொண்ட தொண்டர்களின், மனத்தில் வீற்றிருந்தருள் செய்பவரே தன்னைத் சார்ந்தார்க்குக் கற்பக மரம் போல அருள்பவரே என்று துதிக்க, கருமங்கள் வரைவில் நீங்கும் மூன்றாகிய தமிழின் நூலை, மலைகளுக்கெல்லாம் முதன்மையாகிய மேருமலையின் மேல்,