பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



மத்தால் திருப்பாற் கடலைக் கடைந்து, ஒரு நல்ல பகற்காலத்தை, வட்ட வடிவமாகிய தன்னுடைய சக்ராயுதத்தினால், இராக்காலம் ஆகும்படிச் செய்து, தன்னிடம் பக்தி உள்ளவனாகிய அருச்சுனனுக்குத் தேரைச் செலுத்திய பசிய மேகத்தின் நிறத்தைக் கொண்டுள்ள திருமால், விரும்பிப் போற்றத்தக்க பொருளாக உள்ளவனே அன்பொடு, எங்களைக் காத்தருள்வதாகிய, ஒருநாளும் உண்டோ?

'முத்தைத் தரு' இதில் தரு உவமப் பொருளது. நகை . நகு என்னும் பகுதி அடியாகப் பிறந்தது. இதற்கு விளக்கமுடையது பிரகாசிப்பது என்பது பொருள் பற்கள் கிரகாச முடைமை அறிக. அத்தி' என்றது ஈண்டு தேவகுஞ்சரியாரை இறை தலைவன், கணவன். சத்தி வேல் இது பராசக்தியாரால் அருளப் பெற்றதால் சக்தி எனப் பெற்றது. ஞானசக்தியே வடிவேல் என்பதறிக. -

ఫ్లీ

சரவண அண்மை விளி, கங்கையிலுள்ள சரவண மடுவில் . முருகப்பிரான் அவதாரஞ்செய்து விளையாடி இருந்தவர். ஆதலின் அவருக்குச் சரவணோற்பவன் என்னுந் திருநாமம் ஏற்பட்டது. சரவனோற்பவன் என்றது. சரவண என விகாரப்பட்டு நின்றது. "முத்திக்கொரு வித்து" என்றது முத்தியடைதல் எளிதென்பதை விளக்க, பரனுக்குங் குருவானமையால், குருபர' என்றார். பரமன் உயர்ந்தவன், பரம் - உயர்ந்த இடம்.

சுருதி ஒலி வடிவாக இருப்பது என்பது பொருள். 'சுருதியின் முற்பட்டது என்றது பிரணவமாகிய "ஓம்" என்பதனை.

"உங்கம் உத்தர் கோர்2ெ/முன் தந்த செர்பெருனாவான் செய்வேன் என்னுர்'