பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



'பச்சை இங்குப் பசுமையைக் குறித்தது. இதனானன்றோ.

2க்சை ாேன தன் மரகத வண்ணன்"

%Aசை மாவைசேன் மேன?” - என்றார் பிறகும். பச்சை பண்புத்திரிபு கடவிய செலுத்திய, கடாவுதல் செலுத்தல். மெச்சல் புகழ்தல் விரும்புதல், புகழத்தக்கது விரும்பத்தக்கதே யாதலின் பொருள் என்றது செம்பொருள், மெய்ப்பொருள், முழுமுதற் பொருள் என்பதாம். ஆறுமுக மானபொருள் என்ற கருத்தே "தித்தித்தெய" என்பதை தித்தித்திசை எனப் பாடம் ஒதுவாரும் உண்டு. இதற்குச் செவிக் கினிக்க ஒலிக்கும் இசையை உடைய' என்பது பொருளாம். நிர்த்தம் - பதம் வடசொற்கள் இதற்கு நடனத்தாள் என்பது பொருளாம். பயிரவி ஒருவகை இசை இராகப் பெயர் பரி - தாங்கல், காத்தல், கொத்துப்பறை கொத்து கூட்டம். பறவைகளின் கூட்டம் என்க. களமிசை - அசுரர் போர் செய்த போர்க்களத்தினிடத்து குக்குக்குழு. கோட்டான் ஒலிக்குறிப்பு.

கொட்பு சுழற்சி என்றதான்ும் அறிக. நட்பற் றவுணரை "நட்புடைமை இல்லா அசுரரை என்பது பொருள். நட்பற்ற அவுனரை எனற்பாலது சந்தம் பற்றி நட்பற்றவுணரை என விகாரப்பட்டு நின்றது. அறத்தை இகழ்ந்து மறத்திற் புகுந்த அசுரரை வெறுத்தமை தோன்ற, நட்பு அற்று அவுணரை வெட்டினர் என்பார்.

இராவணன் பத்துத்தலை தத்தத் திருமால் கணை தொட்டதும், அசுரரை முருகப்பிரான் வெட்டிப் பலியிட்டதும் கருணையேயாம். இவை மறக்கருணை எனப் பெறும். மறக்கருணை தப்புச் செய்த பிள்ளையைத் தாய் அடித்துத், திருத்துவது போன்ற கருணை, இனி தப்புச் செய்த பிள்ளையை இன்மொழி கூறி, தின்பொருள் தந்து, அத் தீவழி செல்லாதே