பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



முருகொடுக லந்த சந்தன

அளறுபடு குங்கு மங்கமழ் முலைமுகடு கொண்டெ ழுந்தொறு முருகார

முழுமதியு ரிந்த சிந்துர

அரிவைய ருடன்க லந்திடும் அறிவிலன்ற லம்பி றத்திட அருள்வாயே,

எளிவிடதி மிர்ந்த குஞ்சியின்

நிலமொடுமெ ழுந்த கங்கையும் இதழியொடு அணிந்த சங்கரர் களிகூரும்

இமவரைத ருங்க ருங்குயில்

மரகததி றந்த ருங்கிளி * - எனதுயிர் எனுந்த்ரி யம்பிகை பெருவாழ்வே!

அரைவடம் அலம்பு கிண்கிணி

பரிபுரநெ ருங்கு தண்டைகள் அணிமணிச தங்கை கொஞ்சிட மயில் மீதே

அகமகிழ்வு கொண்டு சந்ததம்

வருகுமர முன்றி லின்புறம் அலைபொருத செந்தில் தங்கிய பெருமாளே! நெருப்பைப்போல் ஒளிவிட ஓங்கி வளர்ந்திருக்கின்ற முடியில், மூன்றாம் பிறையுடனே ஆரவாரத்துடன் வந்த கங்கா நதியையும், கொன்றை மாலையுடனே அணிந்து கொண்டிருக்கின்ற சிவபெருமான், மகிழ்ச்சியை மிகக் கொள்ளும், பனிமலை அரசன் மகளாகப் பெற்ற கரிய குயிலைப் போன்றவரும், பசுமை நிறத்தை உடைய கிள்ளையைப் போன்றவரும் எனது உயிரே என்று கூறப்படும் முக்கண்களை உடையவளுமாகிய உமாதேவியாரது. பெரிய வாழ்வை ஒத்த