பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



பொருந்தாது. ஏனெனில் பின்னால் பக்கத்தே திங்கள் சூடிய நாயகர் என்கின்றாராதலின் அவ்வாறு கூறின் கூறியது கூறல்” என்னுங் குற்றமும் ஆம். முன்னைப் பாட்டில், திரியம்பிகை பெரும் வாழ்வே என்றார். இந்தப் பாட்டில், திங்கள் சூடிய நாயகர் பெரு வாழ்வே' என்றார். பெற்றோர்க்குப் பிள்ளைகளே பெருஞ் செல்வம் என்பதாம்.

2ங்க மேன் மனைாட்சி தந்தன்

நன்க தண்தக்கட் துே” . என்றார் வள்ளுவரும். கடலலைக்கு அசையாது ஓங்கி நிற்றலின் துங்கமாமதில் என்றார். மேவல் விரும்பி அமர்தல். -

"பெண்கள் மாயையில் மூழ்கிக் கெட்டழியாது நின்

திருமலர்த்தாள் தந்து ஆண்டருள்வது எந்த நாளோ என்பது கருததாம்.

12. தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன - தனதான்

களபம் ஒழுகிய புளகித முலையினர்

கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர் கழுவு சரிபுழுகு ஒழுகிய குழலினர் எவரோடும்

கலகம் இடுகயல் எறிகுழை விரகியர்

பொருளில் இளைஞரை வழிகொடு மொழிகொடு தளர விடுபவர் தெருவினில் எவரையும் நகையாடி

பிளவு பெறில் அதில் அளவளவு ஒழுகியர்

நடையில் உடையினில் அழகொடு திரிபவர் பெருகு பொருள் பெறில் அமளியில் இதமொடு

குழைவோடே