பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

79


هیه

மரங்களும் நெருங்கியுள்ள சோலைகளும், தேன் வண்டுகள் பொருந்தியுள்ள பொய்கைகளும், நான்கு பக்கங்களிலும் சூழ்ந்திருக்க, குரங்குகள் கூத்தாடிக் கொண்டிருக்கப் பெற்ற, திருச்செந்தூர் என்னும் புனிதக் கோயிலில் வீற்றிருக்கும், சூரன் முதலாய அந்த அசுரர்களுக்கு யமன் போன்ற பெருமானே! மிகுந்த நீல நிறத்தையுடைய, குங்குமமும் சந்தனமுந் திமிர்ந்த, கமலமலரை ஒத்த கொங்கைகளைக் காட்டி இருளை ஒத்த குழல், நிலைத்து நின்று முடித்த குழல் குலையாதபடி கடைக் கண்களாற் காட்டி முலை விலையைத் தோன்ற எடுத்துக்காட்டி இந்தப் பொருள் நல்லது இந்தப் பொருள் தீயது என்று கூறி விலையைப் பேசி, இயைந்த ஆடவர்களுக்கு அவர்களை நம்பித் தன் தேகத்தைப் பொருள் விரும்பி விடுகின்ற பெண்கள். அவர்களுடனே, அவர் கண்களிலுள்ள கடுநிகர்த்த காமத்தை விரும்பி, தேரையின் உடம்புபோலத் தேகம் மெலிவடைய, வருந்திக் கெட்டு விடுகின்றவனாகிய அடியேனுக்கு, நின்

திருவருளைச் செய்வாயாக.

கன்றி வரு நீலம் - ஆடவர் மனம் வருந்துமாறு வந்துள்ள நீலமலர்போலுங் கண் என்பது பொருள் இனி, துன்புறுத்தி உயிர்வாங்க வரும் மன்மதனின் நீலமலர்போலுங் கண் எனலும் ஆம். மன்மதன் கணைகளில் ஐந்தாவதாகிய நீலமலர் உயிர் வாங்குந் தன்மையது என்பர் இதனாலன்றோ.

குலக் கரத்த திருவெங்கை வானமுன் கட்டதன் நிலக் கணையற்கை வைத்தான்் இனக்தர துர்ே கணிக் கரைவி என்ன விாைந்தக் கணனேகா காலக் கணக்குன்றன்ன மரக் குறுவது

என்ற வெங்கைக் கோவையாருங் கூறினார்.