பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



தோகையையுடைய மயிலைக் குறித்தது. இது சினையாகு பெயர். மயிலும் கோழியும் மாவாக நின்ற அசுரன், வேலாற் பிளவுபெற்றபோது மாறிய உருவங்கள். அவை முறையே முன்னைத் தவத்தால் முருகர்க்கு ஊர்தியுங் கொடியும் ஆயின.

திருமால் தாமத குணன் ஆதலினாலும், இராமாவதாரத்தில் இராசத குணங் காட்டினமையாலும், இரவி குலுத்து இராசத மருவி என்றார். இளையவன் என்றது. பரதரை தபனன் - அக்கினி பொருள்களைத் தபிப்பவன் என்பது பொருள் தபித்தல் - அழிததல். வாட்டல். ஈசுரன் - அடியார் வேண்டும் ஐசுவரியங்களை எல்லாம் தருவோன் என்றும், மோட்சமாகிய ஐசுவரியத்திற்குத் தலைவன் என்றும் பொருளாம். கற்பக + அடவி - கற்பகாடவி என வடமொழித் தீர்க்க.சந்தி பெற்றது."

"அன்புடைத் தம்பிக்கு அரசு தந்த இராமரின் மருகா! ஈசுரனே! நான் மாதர் மயலால் கவலை மனத்தை உடையவன். ஆனாலும் உன்னை மறந்திலன் எனக்கு அருள் செய் என்றதாம்.

17. தான்னந் தனனத் தான்னந் தன்னத்

தான்னந் தன்னத் - தனதான்

காரணிந் தவரைப் பாரடைந் துவினைக்

காதல் கெஞ் சயரத் தடுமாறி

கானரம் புதிரத் தோல்வழும் புறுபொய்க்

காயமொன் றுபொறுத்து அடியேனும்

தார்அணங் குகுழல் கூரணிந் தவிழிச்

சாபமொன் றுநுதற் கொடியார்தம்