பக்கம்:திருவருட் பயன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

"ஆணவம் பிண்டி யருமாயை தான்உமி 
 காமியம் மூக்கென்று காண் "

என்பதும் கண்டு கொள்க’ என அவ்வாசிரியர் மேற் கோளாக எடுத்துக் காட்டுதலாலும் இக் குறள்வெண்பா ஒளவையார் குறளில் இல்லாமையாலும் நன்கு புலனாம்.

சிதம்பரம் கண்கட்டி மடம் மறைஞான சம்பந்தர் என்பார், சைவ சமயநெறி, மகா சிவராத்திரி கற்பம், சோமவார கற்பம், வருத்தமற உய்யும்வழி, பரமோபதேசம், பதி பசு பாசப் பனுவல், சங்கற்ப நிராகரணம் முதலிய நூல்களைக் குறள் வெண்பாக்களால் இயற்றியுள்ளார். இவ்வாறு குறள் வெண்பாக்களால் இயன்ற நூல்களுள் திருக்குறளை அடுத்து எண்ணத்தக்கவாறு சொற்பொருள் நலங்களால் தெளிவும் செறிவும் பெற்றுச் சிறப்புடன் திகழ்வது, உமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்டயன் என்னும் இந்நூலேயாகும். இஃது இந்நூலாசிரியரால் சிவஞான போதத்தின் சார்பு நூலாக இயற்றப்பட்ட சிவப்பிரகாசத்தினைப் பயிலுதற்கு வாய்ப்பாக அந்நூற் பொருளைச் சுருங்க விளக்கும் சுருக்க நூலாகவும் தெய்வப்புலமைத் திருவள்ளுவர் அருளிய திருக் குறளின் அங்கமாகவும் இயற்றப்பெற்றதென்பது,

"பவப்பிரகாசப் படரிருள் விழுங் குஞ்
 சிவப்பிர காசத் திருப்பெயர் மேவி
  ....................................
 சைவ நூற் சலதி நொய்தினிற் கடத்தும்
 மரக்கல் மதற்கு மாலுமி யொப்ப
 எழிலிரைந்தும் வழுவறப் புணர்த்தித்
 தெள்ளுசிர்ப் புலமை வள்ளுவன் தனக்கோர்
 நற்றுணே யுடைத்தெனக் கற்றவர் களிப்ப
 அருட் பயன் என்ன வதற்கொரு நாமந்
 தெருட்படப் புனைந்து செந்தமிழ் யாப்பிற்
 குறளடி வெள்ளை ஒருநூ றியம்பினன் "
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/10&oldid=513083" இலிருந்து மீள்விக்கப்பட்டது