பக்கம்:திருவருட் பயன்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 'கண்தொல்லே’ எனப்பிரித்து. 'கண்ணுக்கு அநாதியே காண் கிற முறைமை உண்டு; கண்ணுக்கும் ஆன்மாவுக்கும் நடுவே ஒளி உண்டோ கண்ணுக்குத் தெரிவு உண்டு. ஒளி இல்லையோ கண்ணுக்குத் தெரிவில்லே’ எனப்பொருளுரைப்பர் சிந்தனே யுரையாசிரியர்.'கண்ணிலே ஒளி இல்லாமற்போனுல், கதிரவ னுெளி பொருந்திக்காட்டிய பொருளேக் கண் காணுமைபோல, இறைவனது அறிவாற்றல் எங்கும் விளங்கினும் அது உயிரி னுள்ளாகக் கலந்து நின்ருலன்றி ஒன்றையும் உயிர் அறிய மாட்டாது' எனக் கருத்துரை வரைவர் கா. சுப்பிரமணியப் பிள்ளேயவர்கள், கண்ணுயிர் நாப்பணிலே’ என்றும் பாடம். உயிர், அருளினலே காரியப்படுதல் எவ்வாறு? என வினவிய மானுக்கர்க்கு அதனே விளக்குவதாக அமைந்தது அடுத்து வரும் குறட்பாவாகும். . 57. புன்செயலி ைேடு புலன்செயல்போல் கின்செயலை மன்செயல தாக மதி. . . . இ-ள்: பருடனது சிறு தொழிலின் வழியே திரி பின்றி நடக்கும் இந்திரியங்களது செயல்போல, மாணவ கனே! நின்னுடைய செய்தியையும் இறைவனது கிரியா சக்தி வழியே அவ்வாறு நடப்பதாகக் கருதுவாயாக. அவ்வாறு கருதவே வினைத் தொடர்பின்றிப் பிறவி நீங்கி கிற்பர் என்பதாம். இதல்ை, இறைவனது செயல்வழி கிற்றல் கூறப் பட்டது விளக்கம்: இது, முதல்வனது அருளாற்றலின் வழி ஆன்மா செயற்படுமாறு உணர்த்துகின்றது.