பக்கம்:திருவருட் பயன்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

直37 வறுமையால் வருந்தும் இரவலர், தம் வறுமைத்துயர் களேயவல்ல வள்ளலாவார் இவர் எனக் கேட்டறிந்து, தாம் இருக்குமிடந் தேடிவந்து குறையிாந்து நிற்க, அன்னுேர்க்கு வேண்டுவன அளித்தல் உலகத்து வண்மையுடையோர் செய லாகவும், பேரருட்கடலாகிய முதல்வன் அவர்களேப்போலன்றி உயிர்கள் ஒன்றையறிந்து வேண்டும் உணர்வினேப் பெருது அறியாமையிருளிற்பட்டு உண்பொருள்நாடிப் புகலிழந்து நிற் கும் அல்லற்காலத்திலேயே உயிர்கட்குத் தனு கரண புவன போகங்களேத் தந்து, வேண்டத்தக்கது. இதுவெனவுணர்த்தி, வேண்டி முழுதும் தரும் பேரருளாளன் என்பது அறிவுறுத்து வார், "தாமே தருமவர் என அம்முதல்வனேக் குறித்தார். "தானே வந்தெம்மைத் தலையளித்தாட்கொண்டருளும் வான் வார்கழல்பாடி என்பது திருவெம்பாவை. தாமே தருதல் என்றது, பிறருடைய அதிகார எல்லேயுட்பட்டுத் தருவ தன்றித் தன் சுதந்தர நிலையில் எல்லார்க்கும் மேலாக நின்று தான் விரும்பியவண்ணம் கொடுத்தல். தம் வலியினுற் கருதலாவது, தமக்கு மேலாய் நின்று அருளால் உளமிரங்கிக் கொடுத்தவர்களே, அவர்கள் அவ்வாறு கொடுத்ததற்கு அவர் தம் அருளுடைமையே காரணம் எனக்கொள்ளாது தம் வன்மை தகுதி முதலியனபற்றிக் கொடுத்ததாக மாறுபடக் கொள்ளுதல். ஆமே-முறையாகுமா? முறையன்று என்பது கருத்து. பிறர்க்கு ஒருபொருளேக் கொடுக்கத்தக்க உடைமை எதுவும் இன்றி, எதனேயும் பிறர்தரப்பெறுதற்குரிய வறுமை நிலேயினேயும் ஒன்றையும் முயன்று பெறுதற்கு இயலாத எளிமை நிலையினேயும் உடைய ஆன்மாவாகிய இவன், சென் ற டையாத திருவெனப்படும் அப்பேரின்பத்தினத் தானே முயன்று பெறுதற்குரிய தகுதி தனக்கிருப்பதாக எண்ணுவது மிகவும் பேதைமையுடைய செயலாம் எனக்கடிந்து கூறுவார், அதற்கு இவன் யார்? என வெகுண்டு வினவினர் ஆசிரியர். இதல்ை, முதல்வன் அருள்வழியடங்கி நின்று, அவ்வருளே