பக்கம்:திருவருட் பயன்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 சேருமேல் பவம் திரும்; நீ ஒதும்படி இது என இயையும். நீ என்றது விட்டினக் காமுற்றுவந்த மாணவன நோக்கியது. 'சிவமுதலாக உச்சரித்து நிட்டையைப் பொருந்தினுல் செனன மரணத் துன்பம் நீங்கும்; உச்சரிக்கும் முறைமை இது என்றறிவாயாக’ என்பது சிந்தனேயுரை. 'உருவாய்த் தெரிந்து உன்றன் நாமம் பயின்றேன் உனதருளால், திருவாய்ப் பொலியச் சிவாயநம என்று நீறணிந்தேன்’ (4-94-6) “அல்லலாக ஐம்பூதங்க ளாட்டினும் வல்லவாறு சிவாயநம என்று நல்லம் மேவிய நாத டிைதொழ வெல்ல வந்த வினைப்பகை மாயுமே” (5-43-5) எனத் திருநாவுக்கரசரும், “நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப்பெற்றே ன் தேனுய்இன் அமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான் தானே வந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான் ஊஞரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே' எனத் திருவாதவூரடிகளும், அருளிய பொருளுரைகள், ஈண்டு எண்ணத்தக்கனவாகும். இவ்வாறு திருவைந்தெழுத்தினே ஒதினுேர்க்கு வரும் பயன்யாதோ என வினவிய மானுக்கர்க்கு, அதன் நிலையை விரித்துரைப்பதாக அமைந்தது, குறட்பாவாகும். அருள் அடுத்து வரும் 38. வாசி அருளியவை வாழ்விக்கும் மற்றதுவே ஆசில் உருவமும் ஆம் அங்கு. இாள் : அவ்வாறு உச்சரிக்குங்கால், வகாரமாகிய அருள். கொண்கிய சிவத்தினக் காட்டி, யகாசமாகிய