பக்கம்:திருவருட் பயன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



18

பொருள்பட வறியாரைக்குறித்து வழங்குவது. இதன்கண் உள்ள மெல்லெழுத்தாகிய ஙகரத்தை அதன் இன வல்லெழுத்தாகிய ககரமாக மாற்றினால், அச்சொல் வெறுக்கையர் என்றாகிச் செல்வம் உடையார் என்ற பொருளைத் தரும்.

இவர் வாழ்ந்த காலம் கி.பி.16-ம் நூற்றாண்டின் பிற் பகுதியாகும். இவர் இவற்றிய சிவஞான சித்தியார் உரை முடிவில் குரு வணக்கமாகப் பின்வரும் பாடலொன்று காணப்படுகின்றது :

"சத்தும் அசத்தும் சதசத்தும் சத்திய மாகிநிற்கும்
 சித்தன் திருவம்பல வாணன் என்னுள்ளம்
                                       (சேர்ந்தனனால்
 சுத்தம் பயின்ற பதிபசு பாசத்தைச் சொல்லும் சத்தம்
 அத்தம் அதற்குள் அதுபோகம் காண்டற் கரிதல்லவே"

இதனால் இவர், திருவம்பலவாணர் என்னும் ஞானசாரியாரிடத்து மெய்ந்நூற்பொருள்களைக் கேட்டுணர்ந்தவர் என்பது புலனாம், "ஞானநெறி காட்டும் நிரம்பவழகன்" என இவர் போற்றப்படுதலால், இவ்வாசிரியர் வழிவழியாக மாணாக்கர் பலர்க்குச் சிவதீக்கை செய்து ஞானநூற் பொருளை அறிவுறுத்தும் ஞானசாசியர் பரம்பரையில் தோன்றியவர் என்பது நன்கு விளங்கும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/21&oldid=513152" இலிருந்து மீள்விக்கப்பட்டது