பக்கம்:திருவருட் பயன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சம்பிர தாயத் தந்தமில் வான்பொருள்

             உலவரப் பெருங்களி யுள்ளம் படைத்த
             பண்பின் மேதகைய சண்பையர் கோமான்
             தற்பலன் தேராப் பற்பல சமயிகள்
             மலைத்தலைக் கொண்மூ மாருத மறைந்தெனத்
             தலைத்தலை யிரியத் தானினி துரைத்த
             புகழ்சிவ ஞானபோத முள்ளுறையாந்
             திகழ்சிவ ஞான சித்தியின் விரிவும்
             என்போல் மருண்ட புன்புல மாக்கள்
             தீரா விடும்பையுந் திருவுளங் கொண்டுதன்
             ஆராக் காதலின் ஆக்கியோ னாகப்
             பாவிடங் கொண்டதன் னாவிடங் கொண்டு
             பவப்பிர காசப் படரிருள் விழுங்குஞ்
             சிவப்பிர காசத் திருப்பெயர் மேவித்
             திசைமகள் மருங்கிற் பரிவுடன் வளைத்த
             நரலையின் தொகைக்கு நான்மடங் குடைய
             சைவநூற் சலதி நொய்தினிற் கடத்தும்
             மரக்கல மதற்கு மாலுமி யொப்ப
             எழிலீ ரைந்தும் வழுவறப் புணர்த்தித்
             தெள்ளு சீர்ப் புலமை வள்ளுவன் றனக்கோர்
             நற்றுணை யுடைத்தெனக் கற்றவர் களிப்ப
             அருட்பய னென்னா வதற்கொரு நாமந்
             தெருட்படப் புனைந்து செந்தமிழ் யாப்பிற்
             குறளடி வெள்ளை யொருநூ றியம்பினன்;
             மற்றவன் புலியூர் வளநகர்க் கீழ்பாற்
             கொற்றவன் குடியிற் குடிகொண் டுறைந்த
             பூசுர னுறைந்த புதுமதி வேணியுங்
             காசுறுங் கண்டமுங் கரந்த
             தேசிக னுமாபதி சிவனென் பவனே.
                சிறப்புப்பாயிரம் முற்றிற்று.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/23&oldid=513159" இலிருந்து மீள்விக்கப்பட்டது