பக்கம்:திருவருட் பயன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

   “குறித்ததொன் றாகமாட்டாக் குறைவிலனதாலானும்” (65)

என்றும் அருளிச் செய்தவாறு காண்க.

இதனால் அவன் அருவுருவு கூறப்பட்டன.

விளக்கம் : அருவம், உருவம், அருவுருவம் எனப் பகுத்துரைக்கப்படும் மூவகைத்திருமேனிகளையும் உடையனாய் அவற்றுள் ஒன்றினும் அடங்காது ஞானமே திருமேனியாகக் கொண்டு உயிர்க்குயிராய் விளங்குவோன் இறைவன் என்பது உணர்த்துகின்றது.

சிவம் சத்தி நாதம் விந்து என்பன நான்கும் இறைவனுக்குரிய அருவத்திருமேனிகள். மகேசுரன், உருத்திரன், மால், அயன் இவை நான்கும் அம்முதல்வனுக்குரிய உருவத் திருமேனிகள். சதாசிவன் என்பது ஒன்றும் அருவுருவத் திருமேனி. இவ்வாறு நவந்தருபேதமாக இறைவனுக்கு மூவகைத் திருமேனிகள் கூறப்படினும், இறைவனை மேற் குறித்த மூவகையுள் ஒன்றினும் அடக்கிக்கூறுதல் இயலாது என்பதாம்.

இத்திருவருட்பயனில் அறிஞர்க்கு அறிவாம் உருவம் உடையான் என இறைவனை ஆசிரியர் குறித்தலால் இறைவனுக்கு ஞானமே இயல்பாகிய உருவமாதலை உடம்பொடு புணர்த்துக் கூறினராயிற்று. இதனால் "வாலறிவன்’ (திருக்குறள்-2) என்ற தொடர்ப்பொருளும்,'ஞானத்திரளாய் நின்ற பெருமான்' (1-69-3} என்றாங்குவரும் திருமுறையாசிரியர் வாய்மொழிகளும் நன்கு வலியுறுத்தப்பட்டமை காணலாம். உளன் - உள்ளத்தின்கண் உள்ளான். எனவே 'மலர்மிசை யேகினான் (திருக்குறள்-3) என்ற தொடர்ப் பொருளையும் ஆசிரியர் குறிப்பாற் புலப்படுத்தியதிறம் உணர்ந்து போற்றத்தகுவதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/39&oldid=514381" இலிருந்து மீள்விக்கப்பட்டது