பக்கம்:திருவருட் பயன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

ஆவன் எங்கும் எவையும் நீர்உறும் எரிபோல் தங்கும்; (ஆயினும்) தானே தனி என இயைத்துரைக்க. அவன் - ஆம்முதல்வன். எங்கும்-சடப்பொருள்கள்தோறும். எவையும். அவன் அவள் அது எனப் பகுத்துரைக்கப்படும் உயிர்த் தொகுதிதோறும். ஏகம்-ஒன்றாதல். நன்றாகக் காய்ச்சப்பட்ட புனலின்கண்ணே தீயின் தன்மையாகிய வெம்மை எங்கும் பரவி ஒன்றாய்க்கலந்து நிற்றல்போல, இறைவனும் உலகுயிர்கள் தோறும் பிரிப்பின்றி ஒன்றாய்க்கலந்துள்ளான் என்பார், ‘எங்கும் எவையும் எரியுறு நீர்போல் ஏகம் தங்கும் அவன்’ என்றார்.

இத்திருவருட்பயன் உரையாசிரியராகிய நிரம்ப அழகிய தேசிகர், "பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் பரந்ததோர் படரொளிப்பரப்பே, நீருறுதீயே" (கோயிற்றிருப் பதிகம்-7) எனவரும் திருவாசகப் பொருளை யுளங்கொண்டு எரியுறுநீர்போல்’ என்பதனை நீர் உறும் எரிபோல்’ என மாற்றிப் பொருள்கூறிய நயம் உணர்ந்து போற்றத்தக்கதாகும்.இனி 'எரியுறுநீர்' என்னும் இத்தொடர்க்கு, எரியில்வைத்துக் காய்ச்சப்பட்டமையால் தீயின் தன்மையாகிய வெம்மையினைப்பொருந்திய நீர் எனப்பொருள் கூறி, காய்ச்சப்பட்ட நீர் தன் தன்மையாகிய தண்மை, தழலின் தன்மையாகிய வெம்மையுள் அடங்கி ஒன்றுதல் போன்று, எல்லாவுலகங்களும் எல்லாவுயிர்களும் இறைவனாகிய தனது வியாபகத்துள் அடங்கி ஒன்றாகத் தான் யாண்டும் நீக்கமறத்தங்கும் அவன் என உவமையை விரித்துரைத்தலும் பொருந்தும்.

திருவள்ளுவர் கூறிய 'இறைவன்' என்னும் பெயர்க்காரணத்தை விளக்கும் முறையில் அமைந்தது இத்திருவருட்பயனாகும்.

இறைவன், கலப்பினால் உயிர்களேயாய் அவற்றோடு ஒன்றாய் நிற்றலும், தன்னியல்பால் அவற்றின் வேறாய் நிற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/45&oldid=514418" இலிருந்து மீள்விக்கப்பட்டது