பக்கம்:திருவருட் பயன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

நாட்கள். பிறக்கும் நாள்.இனிமேலும் உயிர்கள் பிறவியுட் பட்டுப் பிறத்தற்கு உளவாகும் நாட்கள். துறந்தோர் - பிறவிப் பிணிப்பினின்றும் விடுபட்டு இருவகைப்பற்றினையும் நீத்து இறைவனடியைத் தலைப்பட்டு இன்புறும் உயிர்கள். மேலும் துறப்போர்-இனிமேலும் இறைவனருளால் பிறவிப்பிணிப்பினின்றும் நீங்கி உய்திபெறுதற்கு உரியவராக இப்பொழுது பாசப்பிணிப்புடன் கூடிப் பிறந்து இறக்கும் நிலையினராயுள்ள உயிர்கள்.

'ஆன்மாக்கள் முன்பு பிறந்தநாளுக்கும் இனிமேல் பிறக்கப் போகிற நாளுக்கும் இத்தனையென்று தொகையில்லாததுபோல, தேகாதிப் பிரபஞ்சத்தைத் துறந்தடைந்த பேர்களுக்கும் இனிமேல் துறந்தடையப் போகிற பேர்களுக்கும் ஒர் அளவில்லை’ என இக்குறளுக்குப் பொருளுரைப்பர் சிந்தனை யுரையாசிரியர். எனவே படைப்புக் காலந் தொட்டுப் பலவகைப் பிறப்புக்களிற் பிறந்து இருவகைப் பற்றினையும் துறந்து வீடுபெற்ற உயிர்களையும், இனிமேலும் பிறந்து இருவகைப் பற்றினையுந் துறந்து வீடுபெறுதற்கு உரியவகையிற் பாசப்பிணிப்புடன் கூடியுள்ள ஏனைய உயிர்களையும் இத்துணையர் என அறிந்து கணக்கிட்டுக் கூறுவதென்பது, உலகந்தோன்றியது முதல் எத்தனை நாட்கள் ஆயின. இனிமேல் வரக்கூடிய நாட்கள் எத்தனை என ஆராய்ந்து எண்ணித் தொகை கூற ஒண்ணாதவாறுபோல இயலாததொன்றாம் என்றவாறு எனவே இதுகாறும் வீடு பெற்ற உயிர்களும் இதுவரை வீடுபெறாத பாசப்பிணிப்புடன் கூடிய உயிர்களும் அளவற்றன என அவற்றது மிகுதி கூறியவாறு, உயிர்கள் எண்ணிலவாதல் கூறும் இத்திருவருட்பயன்,

   "துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் 
    திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று" (22)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/52&oldid=514444" இலிருந்து மீள்விக்கப்பட்டது