பக்கம்:திருவருட் பயன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

நீங்க ஆணவம் கன்மம் என்னும் இருமலமுடைய உயிர்கள் பிரளய சகலர் என்றும், ஆணவமலம் ஒன்றேயுடைய உயிர்கள் விஞ்ஞானகலர் என்றும் பெயர் கூறப்படுவர். திரிமலத்தார் - மும்மமலமுடைய சகலர்கள். அதனில் ஒன்று தீர்ந்தோர்.மும் மலத்துள் மாயாமலம் ஒன்று நீங்க ஏனை இருமலமுடைய பிரளயாகலர். ஒருமலத்தார் ஆணவமலம் ஒன்றே உடைய விஞ்ஞானாகலர், விஞ்ஞானாகலர்-விசிட்ட ஞானத்தாலே கலையாகிய பந்தம் அற்றவர்; இறைவன் தன்மையிடத்தனாய் உள் நின்றவாறே உணர்த்த விளையும் விஞ்ஞானத்தால் கலை நீங்குதற்கு உரிமையுடையார். இச்சொல், விஞ்ஞானகலர் என மருவி வழங்கும். பிரளயாகலர்-பிரளயகாலத்திற் கலை அற்றவர்; பிரளயகாலத்தில் இறைவன் தானே குருவாய் முன்னிலைக்கண் நின்று உணர்த்துதலால் கலையாகிய பந்தம் (கட்டு) நீங்கும் உரிமையுடையார். சகலர் கலையாகிய பிணிப்புடன் கூடியவர். கலை-பந்தம் (பிணிப்பு) . இறைவன் சகலர்க்கு அவர் வடிவுபோலும் குருவடிவாகிய மானுடப்போர்வையில் மறைந்து படர்க்கையில் நின்று உபதேசத்தால் உணர்த்துவன் என மெய்ந்நூல்கள் கூறும். (2)

இவ்வாறு உயிர்கள் மும்மலமுடையன, இருமலமுடையன, ஒருமலமுடையன என மலத்தொடர்பினால் வேறுபடுவனவாயின், அவ்வேறுபாட்டால் அவை தம்முள் ஒருயிர்க்கு ஒருயிர் அடிமையாகுமோ? என ஐயுற்று வினவிய மாணாக்கர்க்கு ஐயந்தீர அறிவுறுத்துவதாக அமைந்தது அடுத்து வரும் குறள் வெண்பாவாகும்.

         13. மூன்றுதிறத் துள்ளாரும் மூலமலத் துள்ளார்கள்
             தோன்றலர்தொத் துள்ளார் துணை.

இ-ள்: இம் மூன்று திறத்து ஆன்மாக்களும் மூலமலமாகிய ஆணவத்தாற் பிணிக்கப்பட்டவர்களே; அவருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/55&oldid=514467" இலிருந்து மீள்விக்கப்பட்டது