பக்கம்:திருவருட் பயன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

         16. ஒளியும் இருளும் உலகும் அலர்கட்
             டெனிவி லெனிலென் செய.

இ-ள் : விளக்கஞ் செய்யும் ஞாயிறு திங்கள் அங்கி யென்னுஞ் சுடர்களும், மயக்கினைச் செய்யும் அந்தகாரமும், பலவகைப் பொருளோடு சிறந்த உலகமும், விழித்திருக்கிற கண்ணிடத்துச் சோதி இல்லையாயின் என்ன பயனைச் செய்தற் பொருட்டு? எனவே யாதும் இன்றென்பதாம் என்க.

இவ்வுவமையால், மிகுந்த பிரகாசமாகிய சிவனுடைய ஞானமும், இருளாகிய ஆணவமும், கலை முதல் நிலமீறாகிய தத்துவங்களும், நித்தமாய உயிர்களிடத்து உணர்வில்லையாயின் என்ன பயனைச் செய்யும்? என்னும் பொருள் தோன்றி நின்றது. இஃது ஒட்டென்பதோர் அலங்காரம். இம்மூன்று வகையினாலும் நன்று தீதுகளை அடைவன உயிர்களேயாம் என்பதாயிற்று.

இதனால், விளக்க விளங்கும் கண்போல உணர்த்த உணரும் உணர்வினையுடையரென்பதூஉங் கூறப்பட்டது.

விளக்கம் : தாமேயுணருந் தன்மையின்றிப் பிறர் உணர்த்த உணரும் இயல்புடையன உயிர்கள் என்பது உணர்த்துகின்றது.

ஒளி-ஞாயிறு, திங்கள், தீ முதலிய ஒளியுடைப்பொருள்கள். இருள்-பொருள்கள் புலப்படாதவாறு கண்ணொளியை மறைத்து நிற்பது. உலகு-கட்புலனாகிய உலகப்பொருள்கள். அலர்கண்-விழித்திருத்தலால் அலர்ந்தகண். தெளிவு என்றது கண்ணிடத்தே இயல்பாகவுள்ள சோதியை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/61&oldid=514486" இலிருந்து மீள்விக்கப்பட்டது