பக்கம்:திருவருட் பயன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



59

மலத்தால் விளைந்தது என்பார். 'உணரும் பான்மை தெரியாத தன்மை இருளர் தந்தது’ என்றார். இருள் என்னும் அஃறிணையை இருளார்’ என ஆர்விகுதி கொடுத்து உயர்திணை போற் கூறியது, எல்லையற்ற துன்பங்களுக்கு மூலமாகிய அம்மலத்தின் கொடுமை பற்றித் தோன்றிய வெகுளியால் வந்த திணைவழுவமைதியாகும்.

இருள்மலத்தினைக் குறித்துப் பல சொற்களால் விரித்துக் கூறுவது எதற்கு? அறியுந்தன்மையினவாகிய ஆன்மாக்கள், பசுவாகிய தம்மைப்பற்றியும், தம்மைப் பிணித்துள்ள பாசங்களைப்பற்றியும், உயிர்க்குயிராய் உடனின்றுதவும் தலைவனைப் பற்றியும் தாமே உணரும் வன்மையின்றிப் பிறர் உணர்த்த உணரும் நிலையில் அறிவு மறைக்கப்பட்டிருத்தலாகிய இத் தன்மையானது, உயிர்களை அனாதியே பற்றியுள்ள ஆணவ இருளால் விளைந்ததேயாகும் என்க.

உணருந்தன்மையினவாகிய உயிர்கள் அனாதியே இருள் மலத்தால் மறைக்கப்பட்டமையால் எவற்றையும் தாமே அறிய வல்ல அறிவுக்கண்ணிழந்து அல்லற்படும் தன்மையின வாதலை,

 'இருள்தரு துன்பப்படலம் மறைப்ப மெய்ஞ்ஞானமென்னும் பொருள்தரு 
  கண்ணிழந் துண்பொருள் நாடிப் புகலிழந்த குருடரும்’ (4.92-4) 

என உலகின்மேல் வைத்தும்,

   'இருளற நோக்கமாட்டாக் கொத்தையேன்” (4–69–1)

எனத் தம்மேல்வைத்தும் அப்பரடிகளார் உயிரைமறைத்துள்ள இருள்மலத்தின் உண்மையினை அறிவுறுத்தியுள்ளமை இங்கு ஒப்பு நோக்கியுணரத்தகுவதாகும்.

ஆணவமலம் என்பதொன்று இல்லை என்றால் வரும் குற்றம் யாது? என வினவிய மாணக்கர்க்கு, உயிரியல்பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/82&oldid=515360" இலிருந்து மீள்விக்கப்பட்டது