பக்கம்:திருவருட் பயன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

நீங்கிப் பொழுது புலர்தல். மாயையினின்றும் என ஐந்தாமுருபு விரித்துரைக்க, வடிவு ஆதி-உடம்பு முதலியன; தனுகரன புவன போகங்கள். மாயையின் காரியமாகிய இவை மாயேயம் என வழங்கப்படும். கன்மம்-வினை. கன்மத்து-வினையால்; புண்ணிய பாவங்களாகிய இருவினைக்கு ஈடாக. 'வந்து' என்னும் செய்தெனெச்சம் விளக்கனைய என்புழி 'அனைய' என்னும் தன்கருத்தாவின் வினேகொண்டு முடிந்தது. 'வடிவு ஆதி' என்னும் எழுவாய், 'அனைய' என்னும் பயனிலை கொண்டு முடிந்தது.

ஞாயிறு தோன்றிப் பொழுது புலருமளவும் விளக்கானது பூத இருளை ஒரளவு நீக்கிக் கண்ணுக்குப் பொருள்களைக் காட்டிக்கொண்டு நிற்பதுபோல, உயிர்கட்குச் சிவம் பிரகாசித்து ஆணவ இருள் பொன்ற க்கெடும் தூய நிலை தோன்றுமளவும் ஆணவ இருளை ஒரளவுவிலக்கி உயிரறிவுக்குத் துனைநின்று உதவுவன தனுகரண புவன போகங்களாகிய மாயேயங்களாகும். ஆகவே, இவ்வாறு உயிர்கட்குச் சிறிது அறிவுவிளக்கத்தை யுண்டுபண்ணும் மாயையும், இவ்வாறன்றி உயிரறிவை அனாதியே மறைத்து நிற்கும் ஆணவமும் தம்முள் மாறுபட்ட இருவேறு தன்மையன என்றவாறு,

   "கலையாதி மண்ணந்தங் காணில் அவை மாயை
    நிலையாவாந் தீபமே போல "
            
         (சிவஞானபோதம் 8, 7, ‘மாயா தனு விளக்காம்’ ( 4, 5)

என மெய்கண்டாரும்,

  "மலமென வேறொன்றில்லை மாயாகாரியம் தென்னின்
   இலகுயிர்க் கிச்சா ஞானக் கிரியைகள் எழுப்பும் மாயை
   விலகிடும் மலம் இவற்றை, வேறுமன் றதுவேறாகி 
   உலகுடல் கரணமாகி உதித்திடும் உணர்ந்துகொள்ளே"
                                      (சித்தியார் சுபக்கம்-17:)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/89&oldid=515368" இலிருந்து மீள்விக்கப்பட்டது