பக்கம்:திருவருட் பயன்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



73

    33. ஊனறியாதென்றும் உயிரறியா தொன்றுமிவை
        தானறியா  தாரறிவார் தான்.

இ-ள்: அசேதனங்களாகிய தத்துவங்கட்கு எஞ்ஞான்றும் அறிவுண்டாவதில்லை. உயிர்கள் யாதொன்றும் தாமாய் அறியமாட்டா. ஆதலால் அந்த அருள்தான் அறிந்து அறிவியாமல் உலகத்தின்கண் அறிவினைப் பெறுவார் யாவர். எனவே அருளறிந்தறிவித்தே அறியவேண்டும் என்க.

இதனால் அருளிற்கு அறியவேண்டுவதில்லையென்பாரை உயிர்கட்கு அறிவித்தற்பொருட்டு அறியவேண்டும் என மறுத்துக் கூறப்பட்டது

விளக்கம்: யாதொன்றையும் தாமாக அறியமாட்டாத சிற்றறிவினவாகிய உயிர்கட்கு, எல்லாவற்றையும் அறிந்து அறிவிக்கும் உதவியைச்செய்து துணை நிற்பது திருவருளே என்பது உணர்த்துகின்றது.

ஊன்-உடம்பு என்றது அறிவற்ற சடப்பொருளாகிய தத்துவத்தொகுதியை, ஊன் என்றும் அறியாது என்க. என்றும் - எக்காலத்தும். உயிர் - ஆன்மா. உயிர் ஒன்றும் அறியாது-ஆன்மாவானது ஒரு பொருளையும் தானாக அறிந்துணரும் வன்மையுடையதன்று. தான் அறியாது, இவை அறிவார் ஆர் என இயையும். தான் இரண்டினுள், முன்னது திருவருள். பின்னது அசை.

உடம்பு முதலிய கருவிகள் அறிவில் பொருள்களாதலால் அவை தாமாக ஆன்மாவைக்கூடி அறியமாட்டா என்றும் ஆன்மாவுக்குப் பிறர் அறிவித்தாலன்றித் தனக்கெனத் தானே யுணரும் அறிவில்லாமையால் தானகத் தத்துவங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/96&oldid=515396" இலிருந்து மீள்விக்கப்பட்டது