பக்கம்:திருவருட் பயன்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

நின்ற நிலையிலேயே வேண்டுமளவும் பருகும். உயிர்களும் அருளினோடு கலந்து நிற்குமாயின், சிற்றின்பங்களைத் தேடி அவ்வாறுழலாமல் பேரின்பத்தினைத் தாமும் அந்நிலையிலே இடையறாது அனுபவிக்கும் என்பதாம்.

இதனால், அருளோடு கூடி நின்றும் உயிர்கள் துன்புறும் இழிபு கூறப்பட்டது.

விளக்கம் : உயிர்கள் மருள்விளைக்கும் பிறவிப்பிணிப் புட்பட்டமையால் தமக்கு ஆதாரமாகிய அருளை அறியா வாயின என்பது உணர்த்துகின்றது.

அருள் உயிர்கள், மறித்து மால் ஆழி ஆளும் (தன்மை) பால் ஆழி மீன் ஆளும் பான்மைத்து என முடிக்க. அருள் உயிர்கள்-அருளை ஆதாரமாகக்கொண்டு வாழும் ஆன்மாக்கள். மால் ஆழி-மாயாபோகமாகிய மயக்கக்கடல். திருவருளை இடமாகக்கொண்டு வாழும் ஆன்மாக்கள் திருவருளால் வரும் மேலாகிய பேரின்பத்தை நுகர்ந்து இன்புறாமல் மீளவும் மயக்கத்தைவிளைவிக்கும் சிறுமையுடைய மாயாபோகங்களிலேயே அழுந்திக்கிடத்தல், தூய பாற் கடலில் வாழும் மீன்கள் தமக்கு ஆதாரமாகிய பாற்கடலின் இனிய பாலைப்பருகி மகிழ நினையாமல் தம்மைப்பற்றிய பிறப்பின் பயிற்சியால் அழுக்குடைய சிறிய பிராணிகளேயே தமக்கு உணவாகத்தேடித் துன்புறுவதனை ஒக்கும் என்றவாறு.

இறைவனது திருவருள், எல்லையற்ற கடல்போன்று எங்கும்பாவி உயிர்களுக்கு ஆதாரமாய் விளங்குமியல்பினதென்பதும், அருளாாமுதத்தை வழங்கும் அத்திருவருளின் இடமாக வாழ்ந்தும் உயிர்கள் அதனைப்பருகி மகிழும் வாய்ப்பினைப் பெறாது உலக நுகர்ச்சிகலில் அழுந்தித் துன்புறுதற்கு அவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/98&oldid=515398" இலிருந்து மீள்விக்கப்பட்டது