பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 3

      நான்காம் திருமுறை 20ஆவது . "திருவடிக்கண்ணி , பதினொரு தாழிசைகளைக் கொண்டது; நடராசப் பெருமானை நோக்கி, உன் இணையடிதான் நோவாதோ’ என்று கூறுவதாக அமைந்தது.
       ஆறாம் திருமுறை 43ஆவது, திருவடி நிலை' என்ற பதிகம், எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் பத்துக் கொண்டது: ஒவ்வொரு பாட்டும் திருவடிநிலையே' என்ற முடிபுடையது; இறைவன் திருவடிகள் எங்கும் எல்லாப் பொருட்களிலும் கலந்து இருக்கும் பெருநிலையை எடுத்து ஓதுவது; திருச்சிற்றம்பலத்தாடும் திருவடியின் பெருமை பேசுவது.
   ஆறாம் திருமுறை 

68ஆவது, ஆடியபாதம்' இசைப் பாடல். இதில் 'ஆடியபாதம் மன்றாடியபாதம்” என்பது பல்லவி. இது 16 கண்ணிகளையுடையது; பொன்னம்பலத்தில் தூக்கி ஆடும் திருவடியைப் புகழ்வது.

         ஆறாம் திருமுறை 137ஆவது 

'திருவடிப் பெருமை” என்ற தலைப்பில் 45 பாடல்கள், எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங் கள். 1-22, 24-26 பாடல்களில் கனக சபையில் திருநடம் செய்தருளும் திருவாளன் பெருமை கூறப்பட்டுள்ளது. 23, 27-45 வரை சாமி திருவடிப் பெருமை சாற்றுவதார்’, 'மலரடியின் . பெருமை வகுத்துரைக்க வல்லவரார்' என்று இன்னோரன்னவாறு கூறப்பட்டுள்ளது.

     4.நூல் நுதலியபொருள்
     வரி 1 முதல் 34 வரை, 'பரசிவம்' என்று தொடங்கிச் சர்வசக்தி தரம்' என்பது வரை "பரசிவத்தின் பொதுஇலக்கணம்  கூறப்பட்டுள்ளது. (பொது வகையில் பேசப்படுவது

நிர்க்குண நிலை; குணம் உரு பெயர் செயல் முதலியன இல்லாத நிலை நிர்க்குணம் எனப்படும். இது விலகூடிணத் தன்மையுடையது. விலக்ஷணம் - இலக்கணம் வரையறுக்க முடியாதது. )

       வரி 36 முதல் 48 வரை, "தம்மை நிகர் மறையெலாம் இன்னும் அளவிட நின்ற சங்கரன்' என்பது முதல், தம்பிரான் செம்பொற் பதம்' என்பதில் 'தம்பிரான்' என்பது வரை பரசிவத்தின் சிறப்பிலக்கணம் கூறப்பட்டது. (சிறப்பு வகையில் குணம் செயல்களோடு கூடியது சகுன நிலை; இது சலக்ஷணத் தன்மை யுடையது; சலக்ஷணம் - இலக்கணம் பொருந்தியது. வரி 35 காண்க.)