பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

7

சரம் என்றும் அசரம்" என்றும் பிரித்து அளவிட முடியாத வண்ணம் உள்ள பற்பல வகையான உயிர்த் தொகுதிகளைத் தாங்குவது (6):

தண்டுபோலவும் உண்டை போலவும் இருக்கும் அண்டப் பகுதிகளும், அவற்றினும் பெரிதாய் உள்ள பிரமாண்டங்களும் மிகுதியாகத் தோன்றி விளங்குமாறு அருள்வது (62):

தத்துவங்களும்** தாத்துவிகங்களும்’ ’ ஆகக் கூறப்படும் உலகத்தைப் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய எல்லா வற்றுக்கும் கருத்தாவாக விளங்குவது (63):

சகச மல* இருள் அகலத் தூய சிவவொளி திகழ்வது (64);

மதங்கள் எல்லாவற்றிற்கும் மேலான ஞானவெளியில் (சிதாகாசத்தில்) ஆனந்தமா நடனம் ஆடியருள்வது (65).

(3) பதம் (66-70)

இருவினையொப்பு.’ மலபரிபாகம்’ ’ ஆகியவை வாய்க்கு மாறு உயிர்களைப் பிணித்திருக்கும் மாயையை மிதிப்பது (66):

பிறப்பு இறப்பு ஆகிய துன்பங்களுள் அழுந்திக் கிடக்கின்ற உயிர்களை அவற்றினின்று நீக்கி அருள் செய்வது (67);

வீரதாண்டவம் முதலாகவுள்ள ஐவகைத் தாண்டவங்களை யும்’ ’ உயிர்கள் மகிழும் வண்ணம் ஆடியருள்வது (68);

வலிய முயலகன் மீது ஊன்றியது; உயிர்கட்கு வாழ்வு வளம் பெறத் தூக்கியது (59) :

வல்வினையெலாம் நீக்கி அழியாத சிவாநந்த நிலை வழங்குவது (70).


23. சரம் - இயங்கு திணை; அசரம் - நிலைத்திணை.

24. தத்துவங்கள் முப்பத்தாறு.

25 முப்பத்தாறு தத் துவங்களின் உட்கூறுகள் அறுபது.

26. சகச மலம் - ஆணவமலம்.

27. இருவினையொப்பு - நல்வினை தீ வி னை க ளி லு ம் அவற்றின் விளைவாகிய புண்ணிய பாவங்களிலும் அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களிலும் ஒன்றில் விருப்பும் மற்றொன்றில் வெறுப்பும் ஆன்ம அறிவின்கண் நிகழாது இருத்தல்.

28. மலபரி பாகம் - ஆணவமலம் ஒடுங்குதல்.

29. திருமூலர் திருமந்திரத்தில் 'ஆன நடம் ஐந்து’ என்பர்.