பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 12

என் பொறிகளுக்கெல்லாம் பொருள்கள் நன்கு விளங்குமாறு (காணும் உபகாரம், காட்டும் உபகாரம்) செய்தருள்வது; எழு வகைப் பிறப்பினும் விடாது உதவி புரிந்தருள்வது (121);

என் குறையெலாம் தவிர்த்து ஆட்கொள்வது; எனக்கு எய்ப்பில் வைப்பு’ ஆக இருப்பது (122).

    (16) எல்லார்க்கும் இன்பு 
   உதவுகின்ற பதம் (123-128)

எல்லார்க்கும் நல்லனவே அருள்வது: எல்லா நற்செயல்களை யும் செய்தலில் வல்லது; ஒப்பற்ற துணையாவது (123);

நெக்கு நெக்கு நினைப்பவர்களாகிய பத்தர்கட்கு இன்ன முதமுமாய் மகிழ்விப்பது (124);

பாலில் நறுநெய்யொடு சர்க்கரையும் அளவொடு கலந்தாற் போல் இனிப்பது (125).

மா பலா வாழை என்ற முக்கனியும், சர்க்கரைப்பாகும், கருப்பஞ்சாறும், கற்கண்டும், தேனும் போன்று இன்சுவை தருவது (126);

! எங்கள் இறைவன் திருவடி' என்று பல்வேறு சமயத் தலைவர்கள் தமக்குரிய பிரமாணங்களைக் கொண்டு வழக்காடு வதற்குச் சிறப்பாக அமைந்தது (127);

அழிதல் இல்லாத பத முத்திகள் முதலாகிய எல்லாவற்றையும் அளித்தருளுவது; அழிவில்லாத நிலைத்த இன்பம் தருவது (128).

   8.சமய தத்துவக் கருத்துக்கள் 
          அண்டங்கள்

அண்டங்கள் தண்டுபோலவும் உண்டைபோலவும் அமைந் துள்ளன. எல்லா அண்டங்களும் அகிலாண்டம் எனப்பெறும் (62). அண்டங்கள் உண்டை வடிவாய்ப் பலவாய் இருத்தலை மணி வாசகப் பெருமான் திருவண்டப்பகுதியில்,


1 . எழுவகைப் பிறப்பு - தேவர், மக்கள், விலங்கு, பறவை,ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்.

2. எய்ப்பில் வைப்பு - தளர்ச்சியுற்ற காலத்துப் பயன்படும் என்று சேமித்து வைக்கும்பொருள். இச்சொற்றொடர் திருவடிப் புகழ்ச்சியாகிய இந்நூலில் வரி 122லும், விண்ணப்பக் கலிவெண்பாவில் 189ஆம் கண்ணியிலும், திருவருள் முறையீடு என்ற நூலில் 18ஆம் செய்யுளிலும் காணப்பெறும். திருவாசகம் 103இல் இத்தொடர் உள்து.