பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

18

'தோற்றுவித் தளித்துப் பின்னும்

துடைத்தருள் தொழில்கள் மூன்றும்

போற்றவே உடையன் ஈசன்

புகுந்தது விகாரம் என்னில்

சாற்றிய கதிரோன் நிற்கத்

தாமரை அலரும் காந்தம்

காற்றிடும் கனலை நீரும்

கரந்திடும் காசி னிக்கே’’

என்று விளக்கிக் கூறும். (சூரியன் நிர்விகாரியாய் நிற்க உலகில் தாமரை மலர்கிறது, சூரியகாந்தமானது நெருப்பை உமிழ்கிறது; நீரானது மாய்கிறது-என்பது பின்னிரண்டடிகளின் பொருள்).

பரசிவமே படைத்தலும் காத்தலும் அழித்தலும் அருளலும் ஆகிய (பஞ்ச கிருத்திய சுத்த கர்த்தத்துவம் (வரி 14) உடையவ ராயினும், அப்பரசிவத்தின் அதிகாரம் பெற்ற மூவர் (பிரமன்மால் உருத்திரர்) படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிலும் செய்வர். இங்ஙனம் பிரமன் படைத்தல் தொழிலைச் செய்பவர் என்பது,

'மறையவன் செய்உலகம் ஆக்கின்ற

அதிகார வாழ்வை ஈந்தருளும்'

என்றும், திருமால் காத்தல் தொழிலைச் செய்வர் என்பது,

'மாலுலகு காக்கின்ற வண்மை பெற் றடிமையின் வதிந்திட அளிக்கும்’

என்றும் முறையே 75, 82ஆம் வரிகளில் குறிக்கப்பட்டுள்ளன.

இப் பரசிவம் காண்பது காட்சி காண்பவன் என்று பகுக்கப் படும் நிலைக்கு அப்பாலானது (வரி 17).

"தத்துவமசி’ என்ற வாக்கியத்தில் 'தத்’ என்றும், "துவம்' என்றும், 'அசி' என்றும் மூன்று பதங்களுண்டு. 'தத்' என்பது சிவம் என்னும் பொருளைக் குறிக்கும் அது என்பதால் சுட்டப் படுவதாகும். மேலும் இம்மூன்று பதங்கட்கும் அடங்காமல் சொற்பதம் கடந்ததாகவும் உள்ளது (வரி 18).

உயிர்களைப் பிணித்திருக்கும் மலங்களைப் போக்குவது (பசுபாச பாலனம்) (வரி 26); (மலங்கள் ஆணவம் கன்மம் மாயை என்பன) .

பரசிவம், நவம்தரு பேதம் உடையது (வரி 27) : சிவம் சக்தி விந்து நாதம் என்ற அருவத் திருமேனி நான்கு; மகேசன்