பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

23

இத்தாண்டவங்கள் ஐந்து என்று கூறப்படும். திருமூலர் திருமந்திரத்தில் (2727) 'ஆனநடம் ஐந்து' என்று கூறுவர்.

பொன்னம்பலத்தில், அற்புதத் தாண்டவம், ஆனந்த தாண்டவம், அனவரததாண்டவம், பிரளய தாண்டவம், சங்கார தாண்டவம் என்று ஐந்து தாண்டவங்களை இறைவன் நிகழ்த்து கிறான் - என்று திருமூலர் திருமந்திரம் 887இல் கூறப்பட்டுள்ளது.

திருமந்திரம் 2723இல், சிவானந்தக்கூத்து, சுந்தரக்கூத்து, பொற்பதிக்கூத்து, பொன்தில்லைக்கூத்து, அற்புதக்கூத்து என ஐந்து வகைக்கூத்து நடைபெறுதல் சொல்லப்பட்டுள்ளது.

திருமந்திரம் 2743இல், மாணிக்கக்கூத்து, வண்தில்லைக்கூத்து, மன்றுள் புரிசடைக்கூத்து, சிவானந்தக்கூத்து, ஆணிப்பொற் கூத்து என்று சிவன் சீவரது உடம்பில் மூலாதாரம் முதல் துவாத சாந்தம் வரை நடித்தருளுதல் சொல்லப்பட்டது.

நடனம் செய்யும் தலங்கள் (சபைகள்) ஐந்து. அவை, சிதம்பரம் - பொற்சபை, மதுரை - வெள்ளி; நெல்லை - தாமிர சபை; குற்றாலம் - சித்திரசபை; திருவாலங்காடு - இரத்தினசபை என்பனவாம்.

இவற்றின் வேறாகத் திருவதிகை மனவாசகம் கடந்தார் உண்மை விளக்கம் எனும் சாத்திர நூலில், ஊன நாடகம், ஞானநாடகம், பஞ்சகிருத்திய தாண்டவம் என மூவேறு நடனங்களைக் கூறுவர்.

ஊன நாடகம் (செ. 33)

ஆடும் படிகேள் நல் அம்பலத்தான் ஐயனே நாடும் திருவடியி லேநகரம் - கூடும் மகரம் உதரம் வளர்தோள் சிகரம் பகிருமுகம் வாமுடியப் பார்.

ஞான நாடகம் (செ. 34)

சேர்க்கும் துடிசிகரம் சிக்கனவா வீசுகரம்

ஆர்க்கும் யகரம் அபயகரம் பார்க்கிவிறைக்

கங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார்

தங்கு மகரமது தான்.


பஞ்சகிருத்திய நடனம் (செ 36)


தோற்றம் துடியதனில் தோயும் திதியமைப்பில்

சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா

ஊன்று மலர்ப்பதத்தி லுற்றதிரோ தம்முத்தி

நான்ற மலர்ப்பதத்தே நாடு.