பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

32

112. பரமயோகம்-மேலான சிவ போக மயமாய் விளங்குவது.

113. பரிபாக வேதன வரோதய ஆனந்த பதபாலனம் - (பரிபாதம்-பக்குவம்; முதிர்ச்சி, வேதனம்-அறிதல்: வரம்-திருவருள்: உதயம்-தோன்றுவது; ஆனந்தம்-சிவானந்தம்; பாலனம்-பாதுகாத்தல்); ஆன்மா, ஞானம் அடைவதற்குரிய பக்குவம் எய்தியதும் திருவருள் தோன்றுவதை அறியும்; அதனால் சிவானந்தம் அடையும்; அதனைப் பாதுகாத் திருளுவது.

114. பரமயோகம்-சிவயோகமாக விளங்குவது.

115. பரம் சாத்திய அதீத ஆனந்த போக்கியம்-மேலான சாதனங்களால் சாதித்துக் கொள்ளக் கூடிய நிலைமைக்கு அப்பாலதாய் இன்ப நுகர்ச்சியாக இருப்பது.

116. பரிகதம்-எங்கும் நிறைந்து இருப்பது.

117. பரிவேத்தியம் - எங்கும் எல்லாம் அறிந்திருப்பது.

118. பரகேவலாத்துவித ஆனந்த அனுபவம்-மேலான கேவலாத்து விதக் கொள்கையால் பெறப்படும் இன்ப நுகர்ச்சியாக விளங்குவது.

119. சத்தபாத அக்ரசுத்த பலிதம் - (சத்தபாதம்-வேதாந்தம்) வேதங்களை ஓதுவதால் ஆன மேலான நற்பயனாக விளங்குவது.

120. பரம சுத்தாத்துவித ஆனந்த அனுபூதிகம் -மேலான சுத்தாத்துவிதக் கொள்கையில் பெறப்படும் இன்ப நுகர்ச்சியாக விளங்குவது.

121. பரிபூத சித் குணாந்தம் - பூதங்களின் வாயிலாகப் பெறப் படும் அறிவு குணம் ஆகியவற்றின் முடிவில் விளங்குவது.

122. பரமசித்தாந்த நிகமாந்த சமரச சுத்த பரமானுபவ விலாசம்-மேலான சித்தாந்தம் வேதாந்தம் என்றவற்றின் சமரச மாக விளங்குவதுடன், தூயதாய் உயர்ந்த ஞானானுபவ விளக்கமாகவும் விளங்குவது; (நிகமாந்தம்-வேதாந்தம்).

123. தரமிகும் சர்வ சாதிட்டான சத்தியம்-சிறப்புமிக்க எல்லா வற்றுடனும் அதிட்டித்து இருக்கும் உண்மைப் பொரு ளாவது; (அதிட்டானம்-கலந்திருத்தல்).

124. சர்வ ஆனந்த போகம்-எல்லா விதமான இன்ப நுகர்ச்சி களுக்கும் இடம் ஆவது.

125. சார்ந்த சர்வாதாரம்-சார்ந்த எல்லாப் பொருட்கும் ஆதார மாவது.

126. சர்வ மங்கள-எல்லாவற்றினும் மங்களமாக விளங்குவது.

127. சர்வ சக்தி தரம்-எல்லாப் பொருள்களினும் சக்தியாக விளங்குவது.

                 –0-