பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

மேலே கண்ட உரையாடலில் முதலில் நாலாஞ்சாதி என்று கொச்சையாகச் சாடியவரும் அந்த நான்காம் சாதியாராகிய உழவர்தான். மற்றவரும், அவரேதான். பொதுவில் தமிழர் தம்மைப் பிரித்துத் தாழ்வாக்கி நான்காம் இடத்தில் வைத்ததை இவர்களே மேலும். தமக்குத்தாமே தாழ்வாக்கிக்கொண்டு ‘நாலாஞ்சாதி' என்றனர்; என்கின்றனர். இஃதோர் அவலம்.

இந்த நான்காம் சாதிக்கு இழிவு எவ்வாறு வந்தது: கற்பித்தவர் எவர்? தமிழ் மண்ணில் புகுந்த வடமொழி, யாளர் தமிழ் மண்ணின் மைந்தரை இவ்வாறு தாழ் வாகக் குறித்தனர். வடவர் வகுத்த நான்மறைகளில் சில, பகுதிகளும், மனுநூலும் பலமுனைகளில் இவ்வாறு தாழ்வைப் பதிந்துள்ளன.

'சூத்திரன் பிராமணனுக்குப் பணிபுரியவே பிறந்தவன். பணியைப் பெறும் பிராமணன் கூலி தரலாம்: தராமலும் விடலாம்' இது மனுநூலின் விதிப்பு.

இதற்கு மேலும், - 'பிராமணன் மறுத்தாலும் சூத்திரன் அவனுக்குப்பணி செய்வதால்தான் மறுமைப் பயன்கிட்டும்’ என்றும்

விதித்தது. விதித்த இவற்றைத் தமிழ் மண்ணிலும்

ஊன்றியது.

உழவு தாழ்லாம்

இதற்கு மேலும், உலகுக்கும் தமக்கும் உணவைத் தரும்

உழுதொழிலை இழிதொழிலாக விதித்துள்ள மனுநூல்.

"வேதமறிந்த விற்பன்னர் உழவுத்தொழிலை ஏன்

இழிவாகச் சொன்னார்கள் என்றால், அது இரும்பால்

பூமாதேவியைக் கிண்டுகிறதல்லவா' - என்று விளக்கம்

1. மனு : மனுசுமிருதி: 10-84