பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 10宦

திருவள்ளுவர், 'உழுவார் உலகத்தார்க்கு ஆணி’ (1032)

என்று ஆணி அடித்தார்.

மேலும் ஆணி அடிப்புக்குமேல் சம்மட்டி அடியாக, 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ (1033)

என்றார்.

உழவன் தன் இழிதொழிலால் பணிபுரிந்து பார்ப்பன

னுக்கு அடிபணிந்து தொழுதுவாழவேண்டியவன்' என்று மனு விதித்ததை மறுத்து,

"மற்றெல்லாம் தொழுது உண்டு s பின்செல்பவர்’ என்று பார்ப்பனரையும் பகுத்தறிவு சேர்த்துத் தொழவைத்தார்: இழிந்த முனை

தொழில் செய்பவன் என்றவன் பின்னே செல்லவைத்தார். மனு விதித்ததை l 3 விலக்கினார்.

நிலை இவ்வாறிருக்க திருவள்ளுவர்தம் வாய்மொழிக்கு உரை வகுக்கப் புகுந்த பரிமேலழகர் திருக்குறளின் முதற். பகுதியாம் அறத்துப்பாலுக்கு முன்னுரையில்,

'மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும்

விலக்கியன ஒழிதலுமாம்” என்றமை நகைப்பிற்கு உரியதாகின்றது.

திருவள்ளுவர் மனு விதித்ததை கொண்டாரா? உழவை:

இழிதொழில் என்றாரா? மனு விலக்கியவற்றை ஒழித். தாரா? விதித்தவற்றையே விலக்கினார்.