பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

பரணி-அடுப்பு: ஆயிலியம்-பாம்பு;

விசாகம்-முறம்: கேட்டை-வல்லாரை;

மூலம்-தேள்கொடுக்கு; கர்க்கடகம்-நண்டுக்கால்;

திங்கள்-முயலின்கூடு என அதனதன் வடிவமைப்பை வைத்து உவமைப் பெயர்களாகக் கூறின்,

இவ்வகையில் இராகு என்னும் கோள் வடிவமைப்பில் பாம்பாய்-நிறக் கருமையால் கரும்பாம்பாய் உவமைப் பெயரில் கூறப்பட்டது. கேது வடிவமைப்பாலும் சிவந்த நிறத்தாலும் செம்பாம்பு’ எனப்பட்டது,

இவ்வுவமைப் பெயர்களைக் கொண்டே கேது அணுகு

வதைப் பாம்பு கவ்வுவதாகப் பாடினர். இவ்வாறு பாடுவது தமிழ்ச் சான்றோர்க்கு வழக்கமும் ஆயிற்று.

'பாம்பு சேர் மதி' என்று பாம்பு மதியைச் சேர் வதாகப் பாடிய பாலைபாடிய பெருங்ககுங்கோவே,

"அரவு (பாம்பு) துங்கு (விழுங்கும்) மதி' என்று விழுங்குவதாகவும் பாடினார்.

"அரவு நுங்கு மதியினும் .

"அரவு நுங்கு மதி' எனப்பெயர் அறிய முடியாத புலவர் இருவரும் பாடினர்.

1. ವಗಾ பாடிய பெருங்கடுங்கோ : அகம் : 313-4 2. பாலை பாடிய பெருங்கடுங்கோ : குறு : 395-4 3. பாலை பாடிய பெருங்கடுங்கோ : அகம் : 114-5