பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை: இளஞ்சேரன் 19.

'பகவன்’ அமைந்தது. இறைவனை மூலமான பகவனாகஆதிபகவனாகக் காட்டும் திருவள்ளுவர் பகவனை நன்மை தீமையின் பகவு கண்டே முதல்வன் (ஆதி) என்றார். பகுத்து அறிந்த முதல்வன் - பகுத்துக் காட்டும் முதல்வன் என்று பகுத்தறிவு கொண்டவனாகக் காட்டினார்.

பகவன் தமிழ்ச்சொல். பகவான்' என்னும் வடசொல் லின் திரிபு அன்று. 'பக்வான்’ என்னும் வடசொல்லின் 'மூலச்சொல்லாக வடமொழியார் பஜ் (Phag) என்று காட்டுவர். இது மூலமே அன்றி வேர்ச்சொல் அன்று என்றும், இதற்கு வேர்ச்சொல் பகு’ என்னும் தமிழ் வேரே என்றும் மொழியறிஞர் பாவாணர் விளக்கியுள் ளார். எனவே, பகவன்’ என்னும் தூய தமிழ்ச்சொல் ‘நன்மை தீமையைப் பகுத்து உணர்ந்தவன்; உணர்த்து பவன் - முதல் இறைவன்' என்று பொருள்படும். இவ்வாறு இறைவனையே பகுத்தறியும் குணம் உடையவனாகக் குறிப்பாலும் காட்டியுள்ளார் திருவள்ளுவர். மற் றொன்றையும் இதன் தொடர்பால் காண வேண்டும். திருவள்ளுவர் முதல் அதிகாரத்தில் ஒன்பதாவது குறளாக இறைவனை எண்குணத்தான்’ என்று தொகுத்துச் சொன்னார்.

முன் எட்டுக் குறட்பாக்களிலும் எட்டுக் குணங்களைக் காட்டினார். இவ்வகையில் முதல் குறளில் மூலமான இறைவன் பகுத்துனரும் குணத்தன் என்று அறிவுத் தொடர்பாகக் காட்டினார். அடுத்த குறள் கல்வித் தொடர்புடன் வால் அறிவன்’ என்று அறிவுத் தொடர்பி லும் விளக்கப்பட்டுள்ளது. எனவே, திருவள்ளுவர் முதன் மையாக அறிவையே வைத்துள்ளார். அதனினும் பகுத்தறிவையும், தூய அறிவையும் வைத்துள்ளார்.

1. தேவநேயப் பாவாணர் ஞா. முதல் தாய்: 293