பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 21.

இவற்றை நேர்முகமாகத் திருவள்ளுவர் தம் அதிகார வழியாக, கருத்துக்கள் கொண்டு காட்டி முடியாது. கூர்த்த ஆய்வால்தான் காட்டமுடியும். அவர்அங்கங்கு வாய்ப்புள்ள இடங்களிலும், வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்ட இடங்' களிலும் காட்டியுள்ளார் என்றே கூறவேண்டும். அதனை யும் பெரும்பாலும் குறிப்பாகவும், ஓரளவில் வெளிப்படை யாகவும் வைத்துள்ளார் என்பதே பொருந்தும்.

திருவள்ளுவர் கருத்திற்குள் புகுவதற்கு முன் திருவள்ளுவர் காலத்திலும் அதற்கு முன்னரும் ஓரளவில் அவரை ஒட்டிய நூற்றாண்டுகளிலும் எழுந்த தமிழ் நூல்கள் எத்தகைய கருத்துக்களை வெளியிட்டுள்ளன என்று காணவேண்டும். அக்கருத்துக்களால் மாந்தர் எந்த நிலையில் இருந்தனர் என்பதையும் காணவேண்டியது இன்றியமையாததாகும். -

சுருக்கமாகச் சொன்னால் அக்காலச் சூழலில் கடவுட் கொள்கை இருந்தது. ஆனால், தனியொரு சிறப்பாக இல்லை. சாதிக் கொள்கை புகுத்தப்பட்ட அடையாளத் துடன் இருந்தது. மூடக்கொள்கைகள் அள்ளித் தெளிக்கப் பட்டிருந்தன.

திருவன் ளுவர் நோக்கு

திருவள்ளுவர் இந்தச் சூழலைக்கூர்ந்து கண்டுள்ளார். ஆழ்ந்த கவனங் காட்டியுள்ளார். இவற்றால் நேர்ந்திருந்த குறைகளையும், தீமைகளையும் உணர்ந்துள்ளார். இவற்றைக் குறைக்கவும், போக்கவும் முனைந்துள்ளார். இவ்வாறு திருவள்ளுவர் பற்றிக் கருத்தைக் கணிப்பது மேற்போக்கான பார்வையினால் அன்று. ஆய்ந்து கண்ட பரர்வையாலாகும். இவ்வுண்மை மேலே செல்லச் செல்ல

விளங்கும். -