பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை,

போன்றே மன்னன் கடமைகளையும், பெருமைகளையும் விளக்கும் அதிகாரத்திற்கு இறை மாட்சி என்று பெயர் கொடுத்துப் பெருமளவில் இறை என்னும் சொல்லை இரு பொருள்களுக்கும் சமப்படுத்தி ஆண்டார். கடவுட் குறிப்பிற். குரிய இறை என்னும் சொல்லை மன்னன் பொருளுக்கும் இறைமாட்சி என்று அதிகாரத்தில் அமைத்தமை ஒரு குறிப்பாகக் கொள்ளவேண்டியதாகும்.

இறைமாட்சி (மன்னன் பற்றிய) அதிகாரக் குறட்பாக் களில் கடவுட் குறிப்புள்ள இறை எவ்வாறு ஆளப் பட்டுள்ளது?

'இறைகாக்கும் வையக மெல்லாம்; அவனை

முறைகாக்கும் முட்டாச்செயின்' (547)

என்னும் குறளின் முதல் தொடராம் 'இறை காக்கும் வையகமெல்லாம்' பகுத்தறிவு என்பதை மட்டும் தனித்து நோக்கினால் முனை 'கடவுள் உலகத்தை எல்லாம் காப்பாற் தும்’ என்று பொருள் கொள்ளலாம். 3 ஆனால், அடுத்துவரும் அவனை முறை காக்கும்’ என்பது அவ்வாறு பொருள் கொள்ள முடியாமல் 'உலகத்தை எல்லாம் மன்னவன் காப்பாற்றுவான்’ என்று மன்னவனையே கொள்ள முடிகிறது.

இவ்வமைப்பு கடவுளுக்குச் சமமாக மன்னவன் குறிக்கப் படுவதன்றோ?

மேலும்,