பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.

வாழ்வியல் பேரொளிகள் கடவுள் இல்லை’ என்னும் கோள்கையுடையோராக வாழ்ந்துள்ளனர்; வாழ்த்தும் வருகின்றனர்.

'இல்லை என்று வெளிப்படையாகச் சொல்லாது போனாலும், அதுபற்றி நினையாமலும், மறந்தும் வழிபடா மலும் காலங்காலமாய்ச் சிறந்துள்ளனர் பலர். அவரனை வரும் பேய்களா? ... •

சாக்ரடீசு, சன்யாட்சென், காரல்மார்க்சு, இலெனின், இங்கர்சால் நம் நாட்டு சவகர்லால் நேரு, பெருந்தலைவர் காமராசர், பெரியார் ஈ. வே. இரா., அறிஞர் பெருந்தை அண்ணா இவர்களெல்லாரும் பேய்களா? -

இவர்கள் பேய்கள் என்றால் பேய் என்னும் சொல் ஆலுக்குப் பொருள் வேறாக வேண்டும். பேய்" என்பதற்கு அலகை என்று திருவள்ளுவர் கையாண்டுள்ளார் என்றால் அலகை என்பதற்குரிய பல பொருள்களில் எண்ணிக்கை அற்றது என்பதும் ஒரு பொருள். அப்பொருள் உறுதிப் படும்.

s எனவே, பேயாக- அலகையாக வைக்கப்படும்’ என்றதும் கடவுள் மறுப்புக் கொள்கையரைக் குறிக்காது. 'உலகத்தார் உண்டு என்பதும் கடவுள் உண்டு என்பதைக் குறிக்காது. -- . . .

உண்டு என்பதில் காட்சிப் பொருளும் உண்டு, கருத்துப்பொருளும் உண்டு. காட்சிப்பொருள் கண்ணில் படும். கண்ணில் படுவதை இல்லை என்பவன் பேயாகலாம்அலகையாகலாம். - . . . ;

கருத்துப்பொருள் கண்ணிற் படாது; அறிவிற்குப் படும். அதனை இல்லை என்பது மடமை; மாந்தன் ஆகுதிக்கு உரியதன்று, .