பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.

அத்தனர் சாதிப்பெயரா ?

அந்தணர் என்னும் சொல் அழகுச்சொல்; குளுமைக் சொல்; அழகைக் குளுமை தழுவிய சொல். அம்-அழகு; தண்மை-குளுமை. இவ்விரண்டும் இணைந்து அடை மொழியாகி . -

அந்தண் பாதிரி"

"அந்தண் பொய்கை' எனப் பாதிரி மலரையும், பொய்கையாம் குளத்தையும் மட்டுமன்றி,

'அந்தண் புலவர்' என்று மாந்தரில் புலவரையும். சிறப்பித்தனர். இச்சொல்லே 'அர் என்று பலரைக் குறிக். கும் இறுதிநிலை பெற்று அந்தணர் ஆகியது. பரிமேலழகர் உரைப்பாயிரமாக எழுதிய தொடர்கள் முன்னே காட்டப் பட்டன. அதனை மீள் பார்வையிட்டால் அதில் 'அந்தணர். முதலிய வருணத்தார்' என்றிருப்பதைக் காணலாம். :இங்கு அந்தணர் என்னும் சொல் பார்ப்பனர்-பிராமணர் என்னும் பொருளில் எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு பரிமேலழகர் மட்டும் எழுதவில்லை. அவருக்கு முன்னர்த் தோன்றிய சங்ககால நூல்களிலும் இச்சொல்லைக். காணலாம். இப்பொருளன்றி பொதுப் பொருளிலும் காணப்படும்.

எனவே, சங்ககால அளவிலேயே பார்ப்பனர் அந்தணர் என்று குறிக்கப்பட்டனர் மற்றொன்று தலையிலடிப்பது:

1 பாலை பாடிய பெருங்

கடுங்கோ : அகம் : 99.6 2. கயத்துார் கிழார் : குறு : 354-4 3 விளம்பிநாகனார் : நான் : 91-1