பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படித்துணர்ந்திடத் திருக்குறளைப் பகுத்தறிவுச் சித்திரங்களாகத் தீட்டியுள்ளார். இச்சித்திரங்கள் நிச்சயம் படிப்போர் நெஞ்சங்களில் பதியும் சிறப்புப்பெற்றவை. பகுத்தறிவாளர்களின் நெஞ்சங்களில் திருவள்ளுவர் பெருந்தகை நிறைவிடம் பெறுவார்.

வள்ளுவத்தில் உணர்வு அறிவும் பகுத்தறிவு, இறைவன், தெய்வம், கடவுட் கோட்பாடும் இவற்றில் திருவள்ளுவரின் அணுகுமுறை சாதி ஒழிப்புக் கொள்கை, மூட ஒழிப்புக் கொள்கை, ஐயம் நீக்கும் பகுத்தறிவுக் கொள்கைகள், பகுத்தறிவுடன் எளிமை ஆகியவற்றை இளஞ்சேரன் தெளிவாக ஆராய்ந்து கூறியுள்ளார்.

திருவள்ளுவரின் காலச்சூழலையும் அதனை யொத்து அவரது அணுகுமுறையினையும் மனத்தில் கொண்டு நடுநிலை ஆய்வாக இந்நூல் அமைந்துள்ளது.

திருவள்ளுவர் கொண்டு காட்டிய பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை சில அவர் நம்பிக்கையாகவே கொள்ளப். பட்டன'

எனவும் விளக்கி, தாம் தமது ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அளவிற்கு ஏற்ப இருபது பகுத்தறிவு முனைகளைத் தெளிவுற உணர்த்துகிறார் ஆசிரியர்.

காய்தல் உவத்தல் அகற்றிய ஆய்வு நடுநிலை ஆய்வு நேர்மையான ஆய்வு; எடுத்த கருத்தை இறுகப்பிடித்துக்கொண்டு வலிந்து எக்கருத்தும்